புத்தம் சரணம் அப்புறம்?

 தாய்லாந்தில் புத்த துறவிகளை குறிவைத்து மெகா வேட்டை; 80,000 நிர்வாண படம், வீடியோ மூலம் ரூ.100 கோடி மிரட்டி சம்பாதித்த பெண்.

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான டிஆர்எப்- ஐ சர்வதேச தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா.
மறைந்த முன்னாள் முதல்வர்கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து. 
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. 









புத்தம் சரணம் காஜி.!

பாங்காங்: புத்த துறவிகளை குறிவைத்து பாலியல் வீடியோ எடுத்து ரூ.100 கோடி பணம் சம்பாதித்த பெண்ணால் தாய்லாந்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாய்லாந்தில் கடந்த ஜூன் மாதம் பாங்காக்கில் வாட் திரி தோட்சதெப் மடாலயத்தின் புத்த மடாதிபதி திடீரென பதவியை விட்டு வெளியேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஒரு பெண்ணால் மிரட்டப்பட்டதால் அந்த புத்த துறவி தனது பதவியை விட்டு விலகினார். மேலும் அவர் மாயமானார். இந்த வழக்கு தொடர்பாக தாய்லாந்து நாட்டில் பாங்காக்கிற்கு வடக்கே உள்ள நொந்தபுரியில் உள்ள சொகுசு வீட்டில் இருந்து விலாவன் எம்சாத் என்ற 30 வயது பெண் தாய்லாந்து போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். 

மிரட்டி பணம் பறித்தல், பணமோசடி செய்தல் மற்றும் திருடப்பட்ட பொருட்களைப் பெறுதல் ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது வைக்கப்பட்டன.

அவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்திய போது 80 ஆயிரம் நிர்வாண படங்கள், வீடியோக்கள் சிக்கியது கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும் அந்த வீடியோ, படங்களில் இருந்தது அத்தனை பேரும் புத்த துறவிகள். விலாவன் எம்சாவத் வங்கி கணக்குகளை ஆராய்ந்த போது கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.100 கோடிபணம்வந்துள்ளதுகண்டுபிடிக்கப்பட்டது. 

தாய்லாந்தில் உள்ள புத்த துறவிகளை பாலியல் உறவுகளுக்கு கவர்ந்திழுத்து, பின்னர் பணத்திற்காக மிரட்டியது இதன் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. விலாவன் எம்சாத்துடன் புத்த மடத்தை சேர்ந்த குறைந்தது ஒன்பது மடாதிபதிகள் மற்றும் மூத்த துறவிகள் தொடர்பில் இருந்துள்ளனர். இவர்களை மிரட்டி பெற்ற பணம் மூலம் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில் விலாவன் பணம் முதலீடு செய்துள்ளார்.

போலிஸ் விசாரணையில் சில துறவிகள் விலாவனுடன் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்டனர்.

விலாவன் எம்சாவத் கூறுகையில் புத்த துறவிகளில் ஒருவரிடமிருந்து தனக்கு ஒரு குழந்தை பிறந்ததாகக் கூறினார். மாயமான வாட் திரி தோட்சதெப் மடாலயத்தின் மடாதிபதிதான் தனது குழந்தையின் தந்தை என்று அவர் தெரிவித்தார். 

அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தாய்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய 11 மாடதிபதிகள் உள்பட பல புத்த துறவிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

பலர் தானாகவே துறவு மடத்தை விட்டு வெளியேறி விட்டனர். இன்னும் இந்த வீடியோக்களில் சிக்கியவர்கள் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரு நாள் ஷாப்பிங் செய்வதற்கு ரூ.80 லட்சம் வாரியிறைத்த துறவி
கைது செய்யப்பட்ட விலாவன் எம்சாத் கூறுகையில்,’ ஒரு நாள் நான் ஷாப்பிங் செய்ய எனது காதலரான துறவி ஒருவர் ரூ.80 லட்சத்தை வாரியிறைத்தார். 

இதனால் நான் ஒரு விலைமதிப்பற்ற பெண் என உணர்ந்தேன்’ என்று கூறியுள்ளார்.

தாய்லாந்து மக்களிடையே மன உளைச்சலை ஏற்படுத்திய புத்த துறவிகளின் தகாத நடத்தை காரணமாக தனது 73வது பிறந்தநாள் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளவிருந்த 80க்கும் மேற்பட்ட புத்த துறவிகளுக்கான அழைப்பிதழ்களை மன்னர் மகா வஜிரலோங்கோர்ன் ரத்து செய்துள்ளார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

15000 கோடி வீட்டை காலி செய்ய