மீண்டும்,மீண்டும்!

கூகுள் முதலீடு!

ஆந்திராவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் கூகுள் முதலீடு செய்ய உள்ளதாகவும் கடந்த 14ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இதன் மூலம், 'கூகுள் கிளவுட்' கணினி சேவைகள், தரவு சேமிப்பு மையங்கள் மற்றும் ஏ.ஐ., ஆராய்ச்சி பிரிவு ஆகியவை இந்தியாவில் விரிவடையும். முதற்கட்டத்தில், 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என கூறியுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிகம் இருப்பதால், இந்தியாவின், 'சிலிக்கான் வேலி' என பெங்களூரு அழைக்கப்பட்டு வரும் நிலையில், 'கூகுள்' நிறுவனம்  ஆந்திராவின் விசாகப்பட்டினத்தை முதலீட்டுக்கு தேர்வு செய்தது, தொழில்துறை வட்டாரங்களில் மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பேசுபொருள் ஆகி உள்ளது.

தற்போது தமிழ்நாடும் கூகுளை தங்கள் மாநிலத்தை விட்டு கோட்டை விட்டு ,விட்டதாக பேச்சு கிளப்பப் பட்டுள்ளது.

ஆனால் கூகுளுக்கு மிகப்பெரிய வரிச்சலுகையை ஆந்திரா வழங்கியுள்ளது. இதுவே, 'கூகுள்' விசாகப்பட்டினத்தை தேர்வு செய்ய காரணம் என கூறப்படுகிறது.

கர்நாடக அமைச்சர் பிரியங்க் கார்கே, 'ஆந்திராவின் பலவீனமான பொருளாதார சூழலை மறைக்கும் தீவிர முயற்சி இது என்கிறார்.

 ஆந்திர அரசு கூகுளுக்கு, 22,000 கோடி ரூபாய் அளவுக்கு வரிச்சலுகை

, நிலம் மற்றும் தண்ணீருக்கு 25 சதவீத தள்ளுபடி,

 இலவச மின்சாரம்,

 மாநில ஜிஎஸ்டி., திருப்பி வழங்கப்படும் போன்ற சலுகைகளை வழங்கியிருக்கிறது.

இத்தகைய தள்ளுபடிகள் மாநிலத்திற்கு நன்மையைத் தராது.பொருளாதார பேரழிவுதான் தரும். 

அந்த மாநிலம் இதை சமாளிக்க முடியுமா?' என கேள்வி எழுப்பியுள்ளார்.

நியாயம்தான்.

சண்டையில கிழியாத சட்டை எங்கேயிருக்குங்க?


// சிலவற்றை சரியான நேரத்தில் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்! //


🔴 டெல்டாவை கஜா புயல் புரட்டிப் போட்ட நேரத்தில் எட்டு நாட்களாகியும் எட்டிப்பார்க்காத எடப்பாடி!

1️⃣ டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டு 8 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. 

2️⃣ நவம்பர் 15 ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு கரையேறிய கஜா புயல் டெல்டா மாவட்டங்கள் அனைத்தையும் சூறையாடிவிட்டு சென்றது. 

3️⃣ இந்தத் தாக்குதலில் பல கரையோர கிராமங்கள் காணாமல்போன நிலைக்கு துடைத்தெறியப்பட்டன.

4️⃣ விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட ஏழை நடுத்தர மக்களின் எளிய வீடுகள் நாசமாகின. 

5️⃣ லட்சக்கணக்கான மக்கள் ஒரே இரவில் உடைமைகளை இழந்து நடுத்தெருவில் நிர்கதியாக நிற்கும் அவலம் நேர்ந்தது.

ஆனால், புயல் ஓய்ந்த மறுநாளே வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு அருகில் ஓடி நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்ல வேண்டிய அரசு நிவாரண உதவிகளை தயார்படுத்தவே இல்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

புயல் வரப்போகிறது, புரட்டிப்போடப் போகிறது என்று இரண்டு நாட்களாக பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்து வந்த நிலையில், 

மக்களுடைய உயிரைத்தான் பாதுகாக்க முடியும், வீடுகளையோ, விவசாயத்தையோ பாதுகாக்க முடியாது என்பதும் அரசுக்கு தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

மக்களுடைய அத்தியாவசிய தேவைக்கான, உடனடியாக தேவைப்படும் பொருட்களை மறுநாளே வினியோகிக்க முன்னேற்பாடுகளை அரசு செய்திருக்க வேண்டாமா?

❗️மாநிலத்தின் உணவுக்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் ஏற்படப்போகும் பேரழிவை உணர்ந்தும், 

❗️முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மாமனார் ஊருக்குப் போய் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்கவும், 

❗️அரசுவிழாவில் ஆடம்பர வரவேற்பை ஏற்கவும் நான்கு நாட்களை செலவு செய்கிறார் என்றால் அவருடைய மனநிலையை நாம் எப்படி புரிந்துகொள்வது?

❗️ஐந்து நாட்கள் கழித்து மக்கள் ஆத்திரம் வெடித்தவுடன், எதிர்க்கட்சிகளும் மீடியாக்களும் விமர்சனம் செய்தவுடன் ஹெலிகாப்டரில் பறந்து சேதத்தை பார்வையிடப் போவதாக அறிவிக்கிறார். 

மறுநாள் பறந்து பார்த்திருந்தாலும் பரவாயில்லை. 

❗️ஐந்து நாட்களாக போக்குவரத்துக்கு வழியில்லாமல், நிவாரண உதவிகளே கிடைக்காமல் மக்கள் தவித்த நிலையில், எதிர்க்கட்சித்தலைவர் மக்களை சந்திக்கிற நிலையில் முதல்வர் ஹெலிகாப்டரில் பறந்தால், மக்களை என்ன நினைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி என்று கேட்கத்தானே செய்வார்கள்.

❗️புதுக்கோட்டையில் செட்டப் செய்து நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் வேறு பகுதிகளுக்கு செல்லக்கூட முடியவில்லை என்பது எவ்வளவுபெரிய அவமானம். 

இதை மறைத்துவிட்டு பிரதமரை போய் பார்க்கப் போகிறார்.

🔴 நியாயமாக முதல்வர் என்ன செய்திருக்க வேண்டும்? கோட்டையில் இருந்து நிவாரண உதவிகளை போர்க்கால அடிப்படையில் வினியோகிக்க உத்தரவுகளை பிறப்பித்திருக்க வேண்டும். 

🔴 பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒரு இடத்தில் முகாமிட்டு அங்கிருந்து அதிகாரிகளை முடுக்கிவிட்டிருக்க வேண்டும். 

🔴 பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சாலை வழியே பயணம் செய்யப் போவதாக அறிவித்திருக்க வேண்டும். அப்படி அறிவித்திருந்தால் முதல்வர் பயணம் செய்யப்போகும் சாலைகள் போர்க்கால அடிப்படையில் சரிசெய்யப்பட்டிருக்கும். 

🔴 இதுதான் சுயமாய் சிந்தித்து செயல்படும் முதல்வர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

டெல்டா மாவட்டங்களில் கிராமப்புற சாலைகளை அனைத்தும் நிவாரண உதவிகள் செல்லக்கூட வழியில்லாமல் அடைக்கப்பட்டிருந்தன. 

◀️ ஆனால், கிராம மக்கள்தானே, அவர்கள் எப்படியும் தங்களுடைய தேவைக்கு மரங்களை வெட்டி பாதைகளை சரிசெய்துவிடுவார்கள் என்று அரசு இருந்துவிட்டது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ▶️

புயல் தாக்கியவுடன் மறுநாளே மத்திய அரசைத் தொடர்புகொண்டு ராணுவ ஹெலிகாப்டர்களை உதவிக்கு அழைத்திருக்கலாம். 

ராணுவத்தின் உதவியைக் கூட கேட்டிருக்கலாம். ஓபிஎஸ்சின் தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் கிடைக்கும்போது, வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் கிடைக்காதா?

✅ காமராஜரோ, கலைஞரோ, ஸ்டாலினோ எந்த தயக்கமும் இல்லாமல் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு மக்களோடு மக்களாக நிற்க முடியும்போது, எடப்பாடியால் ஏன் அது முடியவில்லை? அவரும் விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவர்தானே?

மக்களை மதிக்கிற மகாராஜாக்கள்தான் மக்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். 

❗️அப்படி இருக்கும்போது சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த எடப்பாடியும் டீக்கடை வைத்திருந்த மோடியும் மகாராஜாக்களைப் போல மக்களை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியிருக்க வேண்டாம்.

பொதுவாகவே டெல்டா மாவட்டங்களை மொத்தமாக பாலைவனமாக்கி அம்பானிகளுக்கும், அதானிகளுக்கும், வேதாந்தாக்களுக்கும் தாரை வார்ப்பதில்தான் பாஜக அரசு மிகவும் குறியாக இருக்கிறது. 

அந்த நோக்கத்தில்தான் காவிரி விவகாரத்தில் மோடி அரசு தமிழகத்திற்கு ஓரவஞ்சனையாக நடந்துகொண்டது. 

ஆனால், இயற்கை அன்னையின் கருணையில் காவிரி பொங்கிவடியும் அளவுக்கு மழை பெய்துவிட்டது. 

இப்போது, விவசாயத்தையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யுமளவுக்கு புயல் புரட்டிப் போட்டிருக்கிறது.

டெல்டா பகுதி நாசமாகி, மக்கள் பாதிக்கப்படுவதை கார்பரேட் முதலாளிகளின் அரசுகளாக தமிழக அரசும், மத்திய அரசும் எட்டாவது நாளாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.

இவர் பொ.ப.துறை அமைச்சராக இருக்கையில்ஜெயலலிதா முதல்வர்.

அக்காலகட்டத்தில்தான் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்து பலர் மாயமாகவும்,பலியாகவும் காரணமாக இருந்தவர்கள்.


நன்றி: நக்கீரன் 

செய்தி வெளியான நாள்: 24 Nov 2018 , காலை 11:30

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை