எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த...






டிரம்ப் மிரட்டல்

பணிந்த  மோடி!

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 அமெரிக்கா கடந்த வாரம் இரு முக்கிய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்ததால் வர்த்தகம் செய்வது சிக்கலானதாக மாறியுள்ளது. இதனால் ரஷ்யக் கச்சா எண்ணெய் வாங்குவதை இந்திய நிறுவனங்கள் நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.

ரஷ்யாவின் முக்கிய எரிசக்தி நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கடுமையான தடைகளை விதித்தன. இந்தத் தடைகள் ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிட்டது. இதற்கு முன்பும் கூட பல ரஷ்ய நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகள் இருந்தாலும் இந்த புதிய தடை சர்வதேச வர்த்தகத்தைச் சிக்கலானதாக மாற்றிவிட்டது.

இந்த நிச்சயமற்ற நிலை காரணமாகச் சில சுத்திகரிப்பு ஆலைகள் தங்களது உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய ஸ்பாட் சந்தையை நாடி வருகின்றன. இதற்காக ஏற்கனவே இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் புதிய டெண்டரை வெளியிட்டுள்ளது. அதேபோல நாட்டின் மிகப் பெரிய தனியார் சுத்திகரிப்பு நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸும், ஸ்பாட் கொள்முதலை அதிகரித்துள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களான லுகோயில் மற்றும் ரோஸ்நேப்ட் ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா கடந்த வாரம் புதிய தடைகளை விதித்தது. ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து இந்த நிறுவனங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்திருந்த நிலையில், அந்த லிஸ்டில் அமெரிக்காவும் இணைந்தது. இந்த புதிய கட்டுப்பாடுகளே இந்திய நிறுவனங்களை மறுபரிசீலனை செய்ய வைத்துள்ளது.

இது தொடர்பாக எண்ணெய் கொள்முதலில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவர் கூறுகையில், "தடை செய்யப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்புடைய பல சரக்கு கப்பல்களின் கொள்முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன. பொருளாதாரத் தடை காரணமாக அந்த நிறுவனங்கள் அல்லது அதன் இணை நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனைகளைச் செய்யவும் வங்கிகள் மறுக்கிறது. இதனால் பணம் செலுத்துவதிலும் சிக்கல் ஏற்படலாம் என நினைக்கிறோம். இதன் காரணமாகவே தெளிவு ஏற்படும் வரை கொள்முதலை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம்" என்றார்.

மற்றொரு சுத்திகரிப்பு துறை அதிகாரி இது தொடர்பாகக் கூறுகையில், "தடை செய்யப்படாத இடைத்தரகர்கள் மூலம் எண்ணெய் வாங்க முடியுமா என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இதற்கான ஆப்ஷன்களை ஆராய்ந்து வருகிறோம். அரசு மற்றும் சப்ளையர்களிடமிருந்து தெளிவு கிடைக்கும் வரை, நாங்கள் புதிய ஆர்டர்களை வழங்க மாட்டோம்" என்று கூறினார்.

உக்ரைன் போர் தொடங்கிய பிறகு உலகின் பல நாடுகள் ரஷ்ய எண்ணெய்யை வாங்க மறுத்துவிட்டன. அப்போது முதலே இந்தியா தான் ரஷ்ய எண்ணெய்யை அதிகமாக வாங்கி வருகிறது. கடந்த 2022 முதல் ரஷ்ய எண்ணெய்யை வாங்கும் மிகப் பெரிய இந்திய நிறுவனமாக ரிலையன்ஸ் இருக்கிறது.

சர்வதேச தடைகளுக்கு ஏற்ப நடவடிக்கையை மாற்றி அமைக்கும் அதேநேரம் தற்போதுள்ள சப்ளையர்கள் உடனான உறவைத் தொடர விரும்புவதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. தடை காரணமாக ரிலையன்ஸ் நிறுவனம், அதன் முக்கிய ரஷ்ய பார்ட்னரான ரோஸ்நேப்ட் நிறுவனத்திடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2025ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியா தினமும் சுமார் 1.9 மில்லியன் பேரல் ரஷ்ய கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ததாக சர்வதேச எரிசக்தி ஏஜென்சி தெரிவித்துள்ளது.. இது ரஷ்யாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 40 சதவீதமாகும்.

இருப்பினும், விநியோகச் சிக்கல், தள்ளுபடி குறைவது உள்ளிட்டவை காரணமாகக் கடந்த சில மாதங்களாகவே ரஷ்ய இறக்குமதி தொடர்ந்து குறைந்தே வருகிறது. கடந்தாண்டு உடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதி 8.4% குறைந்தது. மறுபுறம் மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்காவில் இருந்து வரும் கொள்முதல் அதிகரித்துள்ளது.

எட்டடுக்கு மாளிகையில் ஏற்றிவைத்த...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிமுக கூட்டணிக்கு விஜய் வரப்போவதாக மறைமுகமாக தெரிவித்து வந்த எடப்பாடி.. தற்போது அதை நிறுத்தி உள்ளார். விஜய் பற்றி பேசுவதையே அடியோடு கைவிட்டு உள்ளார் எடப்பாடி.

இந்த முடிவு, அதிமுக நடத்திய ஓர் உட்கட்சி ஆய்வுக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகம் பற்றி எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆய்விற்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் ஆய்வு முடிவுகளின்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்கு இன்னும் வலுவான கட்சி கட்டமைப்பு அல்லது மாநிலம் தழுவிய தொண்டர் படைகள் இல்லை. நடிகர் விஜய் ஒரு திரைப்பட நட்சத்திரமாக பெரும் செல்வாக்கு பெற்றிருந்தாலும் கட்சிக்கு கட்டமைப்பு இல்லை.


காட்சிக்கூடம் பெரிய அளவில் வலுவான கிரவுண்டு பணிகளை செய்ய ஆட்கள் இல்லை.


அவரது அரசியல் கட்சிக்கு அனைத்துத் தொகுதிகளிலும் திறம்பட போட்டியிட தேவையான அடித்தளப் பணியாளர்களும், அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களும் போதிய அளவில் இல்லை என்று அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.


அதிமுகவின் பல மாவட்ட அளவிலான தலைவர்கள், தவெகவின் அமைப்பு இன்னும் ஆரம்ப நிலையிலேயே உள்ளது என்றும், ஒரு பெரிய தேர்தலை எதிர்கொள்ள அது தயாராக இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.


இந்த ஆய்வு மேலும் சில முக்கிய குறைபாடுகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. பல பகுதிகளில் தவெக இன்னும் வட்ட, நகர செயலாளர்களையோ அல்லது உள்ளூர் குழுக்களையோ அறிவிக்கவில்லை, இது தேர்தல் சமயத்தில் ஒருங்கிணைப்பை கடினமாக்கும்.


இந்த தகவல்கள் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வியூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவரது சமீபத்திய பயணங்களிலும், பொதுக் கூட்டங்களிலும், விஜய் அல்லது TVK பற்றி அவர் குறிப்பிடுவதைத் தவிர்த்து வருகிறார். முன்பு NDA பாணியிலான கூட்டணி குறித்துப் பேசும்போது அடிக்கடி விஜய் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக அவரை பற்றி குறிப்பிடுவது வழக்கம்.


கட்சி வட்டாரங்களின்படி, வாக்குகள் அல்லது கள ஆதரவு ரீதியாக பெரிய பங்களிப்பு செய்ய வாய்ப்பில்லாத ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து எந்த அரசியல் ரிஸ்கையும் எடுக்க எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை.

அதிமுக தலைவர்கள், தனது சொந்தக் கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தவும், வாக்காளர்களைக் குழப்பவோ அல்லது அதிமுகவின் பாரம்பரிய ஆதரவை பலவீனப்படுத்தவோ கூடிய எந்தக் கூட்டணியையும் தவிர்க்கவும் அவருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதை அந்த ரிப்போர்ட்டில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், விஜயின் வளர்ந்து வரும் பிரபலம் மற்றும் வரவிருக்கும் பொது நடவடிக்கைகள் கட்சியின் இமேஜை மேம்படுத்தும் என்ற நம்பிக்கையில் TVK உறுப்பினர்கள் உள்ளனர்.


இருப்பினும், அதிமுகவின் இந்த ஆர்வமின்மை, TVK வலுவான தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளை அமைப்பதை மேலும் கடினமாக்கலாம்.


தவெக தனித்து நிற்கும் சூழலை உருவாக்கலாம். தற்போது வரை தவெகவை நம்பாமல் தனியாக NDA கூட்டணியிலேயே தொடர எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை