ஏன் வெளியே போறீங்க?
வங்கக் கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடக்கும் எனக் கணிப்பு. காக்கிநாடா அருகே நாளை இரவு, மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட். விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளிடம் இளைஞர் அத்துமீறிய விவகாரம். வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடம் என மத்தியப்பிரதேச பாஜக அமைச்சர் சர்ச்சைக் கருத்து.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தி விட்டதாக கூறும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திக்க,அவருக்கு எதிராகப் பேச மோடிக்கு பயம்: காங்கிரஸ்.ஏன் வெளியே போறீங்க?
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியா வந்துள்ளது.
இந்நிலையில் மந்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு ஆஸ்திரேலிய மகளிர் அணி வந்துள்ளது. அப்போது இரண்டு ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கஃபேவுக்கு செல்வதற்காக, தாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து வெளியே சென்றுள்ளனர்.
அப்போது இளைஞர் ஒருவர், ஆஸ்திரேலிய வீராங்கனைகளை பாலியல் ரீதியா துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புகார் எழுந்ததை அடுத்து, வீரர்களிடம் தவறாக நடந்து கொண்டு இளைஞர் ஒருவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து பா.ஜ.க அமைச்சர் அலட்சியத்துடன் பதில் அளித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
”ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகள் யாரிடமும் சொல்லாமல் ஏன் வெளியே சென்றார்கள். ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.” அம்மாநில அமைச்சர் அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவர் அருண் யாதவ், "இந்த சம்பவம் ஏற்கனவே மத்தியப் பிரதேசம் மற்றும் நாட்டின் நற்பெயரை சர்வதேச அளவில் கெடுத்துவிட்டது; இது ஒரு ஆழமான கறையை ஏற்படுத்தியுள்ளது.
மோசமடைந்து வரும் சட்டம் ஒழுங்கு நிலைமையையும் பலவீனமான நிர்வாக அமைப்பையும் சரிசெய்வதற்குப் பதிலாக, கைலாஷ் விஜய்வர்கியாவின் கருத்துக்கள் அவரது மனநிலையையும் அரசாங்கத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் மனநிலையையும் பிரதிபலிக்கின்றன” என தெரிவித்துள்ளார்.
பீகார் நி(க)லவரம்?
பீகார் மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. பீகார் சட்டமன்றத் தேர்தலானது, இந்தியாவுக்கே முக்கியமான தேர்தலாக அமைந்துள்ளது.
ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாற்காலியை கவிழ விடாமல் காப்பாற்றி வருகிறார் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதிஷ்குமார். அவரது தோளில் தான் பீகாரில் பா.ஜ.க. பயணம் செய்கிறது. இரண்டு கட்சிகளும் சமஅளவில் தொகுதியைப் பிரித்து போட்டியிடுகின்றன. தங்களைப் பற்றி பேசுவதை விட லாலு பிரசாத் கட்சியைப் பற்றி அவதூறு பேசுவதையே பா.ஜ.க.வும் நிதிஷ் கட்சியும் செய்து வருகின்றனர்.
'இந்தியா' கூட்டணியின் வலிமையான கட்சிகளாக காங்கிரஸ் கட்சியும், லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியும் உள்ளன. ராகுல் காந்தியும் தேஜஸ்வீயும் 'இரு சகோதரர்கள்' போல சில மாதங்களாக பீகாரில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் காட்சிகளுக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை பா.ஜ.க. வால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இந்தியா கூட்டணி நிலைக்காது, ராகுலுக்கும் தேஜஸ்வீக்கும் பிரச்சினை, தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்க மறுக்கிறார் ராகுல்... என்றெல்லாம் சில வாரங்களாக அவதூறுகளையும் வதந்திகளையும் விதைத்து 'இந்தியா' கூட்டணியை பலவீனப்படுத்தி வந்தது பா.ஜ.க.
இவர்களது ஆசையில் மண்ணைப் போட்டது 'இந்தியா' கூட்டணி. தேஜஸ்வியை முதலமைச்சர் வேட்பாளராக 'இந்தியா' கூட்டணி அறிவித்தது. ஆர்.ஜே.டி., காங்கிரஸ், ஜே.டி.யு., இடதுசாரி கட்சிகள் இணைந்து வலிமையான அணியாக உருவாகி உள்ளது. "நாங்கள் அரசாங்கத்தை அமைக்க மட்டுமல்ல, பீகாரின் வளர்ச்சிக்காகப் பணியாற்றவும் கைகோர்த்துள்ளோம்." என்று சொல்லி இருக்கிறார் தேஜஸ்வீ.
“அந்தக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? நிதீஷ் குமார் தலைமையில் தேர்தலைச் சந்திக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர். மகாராஷ்டிரகூட ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தேர்தலை எதிர்கொண்டார்கள். பின்பு வேறு ஒருவர் முதல்வர் ஆனதைப் பார்த்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நிதிஷ் குமாரை பா.ஜ.க.வினர் முதல்வராகப் போவதில்லை. அவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஐக்கிய ஜனதா தளத்தையும் அழித்து விடுவார்கள்" என்று தேஜஸ்வீ பரப்புரை செய்து வருவது பீகார் மக்களிடம் நன்கு எடுத்து வருகிறது.
பீகாரில் வேலை வாய்ப்பு தான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது. அதனையே தனது வாக்குறுதியாக தேஜஸ்வீ கொடுத்துள்ளார்.
“பீகாரில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்கச் செய்வதற்கான சட்டத்தை 20 நாட்களுக்குள் நிறைவேற்றுவோம். அந்த சட்டத்தின் அடிப்படையில் 20 மாதங்களில் அனைத்து ஆட்சேர்ப்பு பணிகளையும் முடிப்போம்” என்று அறிவித்துள்ளார். '"அரசு வேலை என்றால் அலுவலகத்தில் மட்டும் வேலை இல்லை. சுகாதாரம், கல்வி, விவசாயம், கட்டுமானம், சமூக நலன் போன்ற துறைகளில் பெரும் பணியிடங்கள் உருவாக்கப்படும். மாநிலத்தின் நிதியையும் மாற்றியமைக்க முடியும்” என அவர் சொல்லி இருக்கிறார்.

தேஜஸ்வீயை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது பா.ஜ.க.வை திணறடித்துள்ளது. பா.ஜ.க. வின் இரட்டை எஞ்சின் பேச்சு எடுக்கவில்லை. “எதிர்வரும் தேர்தலானது யாரை சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக அல்லது முதல் மந்திரியாக ஆக்க வேண்டும் என்பது பற்றி அல்ல. திரும்புமா அல்லது மாநில வளர்ச்சிப் பாதையில் தொடருமா என்பதை இந்தத் தேர்தல் தீர்மானிக்கும். லாலு-ராப்ரி அரசாங்கம் அமைந்தால், காட்டாட்சி மட்டுமே வரும், அதே சமயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், பீகார் மாநிலம் வளர்ச்சியடைந்து, நாடு முழுவதும் தனது அடையாளத்தை பதிக்கும்.” என்று அமித்ஷா சொல்லி இருக்கிறார்.
பா.ஜ.க.வின் முழக்கங்களில் ஒன்று இரட்டை எஞ்சின் ஆகும். இதனைக் கடுமையாக விமர்சித்துள்ளார் தேஜஸ்வீ. “ஒரு எஞ்சின் ஊழல், மற்றொரு எஞ்சின் குற்றம்” என்று சொல்லி இருக்கிறார் தேஜஸ்வீ.
இதுவரை நிதிஷ்குமார், பா.ஜ.க. ஆட்சி பீகாருக்கு என்ன செய்தது? பீகார் மாநில முதலமைச்சராக பத்து ஆண்டுகள் ஆட்சி செய்தும் அவர் முன்னேற்றம் அடையவில்லை. அவரது ஆட்சியில் பீகார் அனைத்து துறையிலும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.
பீகார் இந்தியாவில் மிகக் குறைந்த நகர்மயமாக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகவே எந்த முன்னேற்றமும் இல்லை என்கிறது ஒரு புள்ளிவிபரம். பீகாரின் வளர்ச்சித் துறை மிகமிகப் பின் தங்கி உள்ளது. பீகாரில் இளைஞர்கள் வேலை இல்லாமல் இருப்பது தேசிய விழுக்காட்டை விட அதிகமாக உள்ளது. பீகாரில் வேலை வாய்ப்பு குறைவாக இருப்பதால் பலர் வேலை தேடுவதில் கூட ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்களாம். பீகாரில் இளைஞர்கள் அதிகம். அவர்களுக்கான எந்தத் திட்டத்தையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு உருவாக்கவில்லை. நிதிஷ்குமார் அரசு உருவாக்கவில்லை.
நடுநிலைப் பள்ளியை விட்டு பள்ளிப் பிள்ளைகள் விலகுவது தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகம் ஆகும். தேசிய விழுக்காடு என்பது 5.20 ஆகும். ஆனால் பீகார் 25.90 விழுக்காடு ஆகும். கல்வி, தொழில், நகர்மயமாக்கல், வருமானம் ஆகிய அனைத்திலும் பீகார் மாநிலம் மிகமிகப் பின் தங்கி உள்ளது 'டைம்ஸ் ஆப் இந்தியா' புள்ளிவிபரங்களுடன் பட்டியலிட்டுள்ளது.
இதன் பிறகும் இரட்டை எஞ்சின் அரசு என்று பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் சொல்வது கேலிக்குரியது மட்டுமல்ல, மக்களை ஏய்ப்பது ஆகும். பா.ஜ.க. ஆட்சி இயந்திரம் என்பது எப்போதும் பழுதடைந்த இயந்திரம்தான். வகுப்புவாத எண்ணமும் பிளவுவாதமும்தான் அவர்களிடன் செயல்படும். மற்ற அனைத்து பாகமும் என்றும் எப்போதும் வேலை செய்யாது.









