கும்பமேளா முதல் கரூர் வரை

 2025-ல் நிகழ்ந்த மோசமான கூட்ட நெரிசல் சாவுகள்

ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்  ஒன்பது பக்தர்கள் உயிரிழந்தனர்.

இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த கூட்ட நெரிசல் சம்பவங்களை குறித்து கீழே காணலாம்.


மகா கும்பமேளா, பிரயாக்ராஜ்:

ஜனவரி 29 அன்று, பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் மௌனி அமாவாசை விழாவின் போது சங்கமத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 30 பேர் இறந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்தனர்.


லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவதற்காக கூடியிருந்தனர், இதனால் கடுமையான கூட்டம் ஏற்பட்டது.


இறப்பு எண்ணிக்கை குறித்து ஆரம்பக்கட்ட குழப்பத்திற்குப் பிறகு, அதிகாரிகள் 30 பேர் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தினர்.ஆனால் அதைவிட அதிகம் என்பது உண்மை.


புது தில்லி ரயில் நிலையம்:


பிப்ரவரி 15 அன்று, புது தில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்தனர்.


கும்பமேளாவில் கலந்து கொள்ள பிரயாக்ராஜுக்குச் சென்ற பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் இந்த சோகம் சம்பவம் ஏற்ப்பட்டது.


மோசமான கூட்ட நிர்வாகித்ததே  மற்றும் சரியான ரயில் அறிவிப்புகளை வெளியாடததே இதற்குக் காரணம் என்று ஆரம்பகால அறிக்கைகள் தெரிவித்தன.


இருப்பினும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பின்னர் நாடாளுமன்றத்தில், "பயணிகளில் ஒருவரிடமிருந்து ஒரு பெரிய சுமை விழுந்த பிறகு" குழப்பம் தொடங்கியது என்று கூறினார்.


 ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட நெரிசல்:


ஜூன் 4 ஆம் தேதி, பெங்களூருவின் எம். சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஐபிஎல் வெற்றி நிகழ்வின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்தனர் .

இதில்  ஆறு வயது சிறுமி உட்பட 33 பேர் காயமடைந்தனர்.


அணியின் சாம்பியன்ஷிப் வெற்றியைக் கொண்டாட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்த போது இந்த சம்பவமானது நிகழ்ந்தது.


பூரி ரத யாத்திரை, ஒடிசா:


கடந்த ஜூன் 28 அன்று, ஜகன்னாத் பூரி ரத யாத்திரையின் போது ஏற்ப்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி மூன்று பக்தர்கள் இறந்தனர் மேலி, 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


ஜூன் 29 அதிகாலையில் ஸ்ரீ குண்டிச்சா கோயிலுக்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது, ரதங்களுக்கு அருகில் திடீரென ஏற்பட்ட திடீர் நெரிசலில் சிக்கி  பலர் விழுந்து மிதிக்கப்பட்டனர்.


கரூர் கூட்ட நெரிசல்:


கரூர் மாவட்டத்தில் செப்டம்பர் 27 நடந்த தவெக கூட்ட நெரிசல் சம்பவம் இந்த ஆண்டின் மிக மோசமான கூட்ட நெரிசலில் ஒன்றாகும், இந்த நெரிசல் சம்பவத்தில் சிக்கி 41 அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டனர்.

மேலும் 100 பேர் காயமடைந்தனர்.


தமிழ் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே) ஏற்பாடு செய்த இந்த மக்கள் சந்திப்பு நிகழ்வில், விஜயை காண ஆயிரக்கணக்கானோர் அவரது வாகனத்தை நோக்கி முன்னேறிய நிலையில் கூட்ட நெரிசலானது ஏற்ப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை