நேர்மைத் திறனுமின்றி.,

மதுராந்தகம் சுற்று வட்டார கிராமங்களின் குடிநீர் ஆதாரமான நல்ல தண்ணீர் குளம் பாழாகும் அபாயம்: வேலி அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . உத்தரவு
நோய்களை கண்டறிய முக்கிய பங்காற்ற உள்ள கண்கள்; கண்களை பார்த்தால் இதயத்தின் ஆரோக்கியம் தெரிந்துவிடும்: புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு.
காட்டாங்கொளத்தூர் அருகே 40 சென்ட் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு: அதிகாரிகளை முற்றுகையிட்ட ஆக்கிரமிப்பாளர்கள்.
இந்தியாவில் பாமாயில் இறக்குமதி சரிந்தது
இடத்தின் மதிப்பை குறைத்து பத்திரப்பதிவு செய்ய ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய பெண் சார்பதிவாளர் கைது: சுடுகாட்டை விதிமீறி பத்திரப்பதிவு செய்தவர்.தொடர் விதிமீறல்.
கர்நாடகா உயிரியல் பூங்காவில் சென்னை பெண் மீது சிறுத்தை தாக்குதல்.
மேகதாது அணை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய நீர்வள ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்க கூடாது: தமிழக அரசிடம் கருத்து கேட்க உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கையை குறைத்தால் அமெரிக்க கல்லூரிகள் அழிந்து விடும்: அதிபர் டிரம்ப்.
சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரம். தேவசம்போர்டு முன்னாள் தலைவர் வாசு கைது.
தஞ்சை,கல்லூர் கோயில் குளத்தில் சுற்றித் திரிந்த முதலையை பிடித்த ஊர் மக்கள்.
தேமுதிக இடம் பெறும் கூட்டணியே வெல்லும் - பிரேமலதா விஜயகாந்த்.
சேலம் விமான நிலையம் டாக்டர் எடப்பாடி பழனிசாமி விமான நிலையம் என பெயர் மாறுகிறது?
"இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்" துவக்கப்பட்ட தினம் இன்று.
கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் ஒன்றாக சென்னை சோழிங்கநல்லூர் வட்டம் செம்மண்சேரியில் "இந்திய கடல்சார் பல்கலைக்கழகம்" (Indian Maritime University) துவக்கப்பட்ட தினம் 

நேர்மைத் திறனுமின்றி.,

பீகாரின் அரசியல் முகங்களாக கருதப்படும் லாலு பிரசாத் யாதவ் மற்றும் நிதிஷ்குமார் ஆகிய இருவருமே, மாநிலத்தின் முன்னோடியாக கருதப்படும் கர்பூரி தாக்கூரிடம் அரசியல் பயின்றவர்கள் ஆவர்.


கடந்த 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக நிதிஷ்குமார் முதலமைச்சரானார். 


ஆனால், போதிய எம்.எல்.ஏக்களின் ஆதரவு இல்லாததால், ஒரே வாரத்தில் அவரது ஆட்சி பறிபோனது.

ஆனாலும், 2004 ஆம் ஆண்டு இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட நிதிஷ் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றார். ஆனாலும், வாஜ்பாயி அரசாங்கத்தில் ஒன்றிய அமைச்சர் பதவி வகித்தார்.


முதல் முறை முதலமைச்சர் பதவி 

கடந்த 2005 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜக முறையே 88 மற்றும் 55 தொகுதிகளை கைப்பற்றின. இதனால், கூட்டணி ஆட்சியில் நிதிஷ்குமார் முதல்முறையாக பீகார் மாநில முதலமைச்சரானார்.


அதன் பிறகு தொடர்ந்து நேரத்திற்கு ஏற்றவாறு கூட்டணியை மாற்றி அமைத்து முதலமைச்சர் நாற்காலியை தக்க வைத்து வந்தார். இடையில் 2013 ஓராண்டு மட்டுமே முதலமைச்சர் பதவியில் இல்லாமல் இருந்து வந்தார்.


ஆனால் இவ்வளவு நாட்கள் முதலமைச்சராக இருக்கும் நிதீஷ்குமார் ஒருமுறை கூட சட்டமன்ற உறுப்பினராக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


எம்.எல்.ஏவுக்கு நிற்காத நிதிஷ்

இதுவரை 9 வது முறையாக நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்று இருந்தாலும், கூட ஒருமுறை மட்டுமே எம்எல்ஏவாக இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


அதன்பிறகு கடந்த 35 ஆண்டுகளாக நிதிஷ் குமார் எம்எல்ஏ ஆகாமலே முதல்வர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம், பீகாரில் மேலவை உறுப்பினர் பதவி இருப்பது குறிப்பிடத்தக்கது. 


தமிழ்நாட்டில் சட்டசபை மட்டுமே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஒரு சில மாநிலங்களை மேலவை உறுப்பினர் என்ற பதவி இருக்கிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்பட மாநிலங்களில் உள்ளது.


இவ்வாறு மேலவை உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படுவார். அவ்வாறு தொடர்ந்து நித்திஷ் குமார் ஒவ்வொரு முறையும் மேலவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலமைச்சராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்துறை தோல்வி?

நவம்பர் 10 அன்று செங்கோட்டை அருகே நடந்த கொடூரமான குண்டுவெடிப்பு, தேசத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. 

13 அப்பாவி உயிர்கள் பறிபோயுள்ளன; 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.இது வெறும் பயங்கரவாத தாக்குதல் மட்டுமல்ல - இது நமது பாதுகாப்பு அமைப்பின் முழுமையான தோல்வியின் வெளிப்பாடு.

குண்டுவெடிப்பு என்பது மிகக் கீழ்த்தரமான, கோழைத்தனமான செயல். பயங்கரவாதிக ளுக்குச்சாதி, மதம், இனம் எதுவும் கிடையாது. 

அவர்கள் மனிதகுலத்தின் எதிரிகள். அப்பாவி மக்களைக் குறிவைக்கும் இந்த மிருகத்தனத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

 நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும்.

அதே நேரத்தில், பாதுகாப்புத் தோல்வி குறித்து எழும் கேள்விகளுக்கும் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும். “இந்தியாவின் பாது காப்பை என்னிடம் ஒப்படையுங்கள்” என்று மார்தட்டிக் கொண்ட மோடி தலைமையின் கீழ், தேசத்தின் தலைநகரின் இதயப் பகுதியில் எப்படி இந்த அளவிற்கு ஒரு பாதுகாப்பு குறைபாடு ஏற் பட்டது?

 உளவுத்துறை எச்சரிக்கைகள் இருந்தும் ஒன்றிய அரசு விழித்துக்கொள்ளாதது ஏன்?

தில்லியிலிருந்து வெறும் 60 கிலோமீட்டர் தொலைவில் நவம்பர் 10 அன்றுஃபரீதாபாத்தில் 350 கிலோ வெடிபொருட்கள், துப்பாக்கிகள், டைமர்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. சந்தேகத் திற்குரிய பயங்கரவாதி 3 மணி நேரத்திற்கும் மேலாக காரில் நிதானமாக அமர்ந்திருப்பதை சிசிடிவி காட்சிகள்காட்டுகின்றன. 

ஒரு மிக முக்கியப் பகுதியில், ஒரு கார் நீண்ட நேரம் நிற்பது காவல்துறைக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தாதது ஏன்? தில்லியின் பாதுகாப்பு ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில்தான் இன்றும் உள்ளது. மாநில அரசும் பாஜகவின் கையில்தான் இருக்கிறது.

2008 மும்பை தாக்குதலின்போதுஇதே பாஜக தாக்குதலுக்குப் பொறுப்பேற்று உடனே அனை வரும் பதவி விலக வேண்டும் எனக் கூறியது. மேலும் தேசிய செய்தித்தாள்களில் கருப்புப் பின் னணியில் சிவப்பு எழுத்துக்களுடன் “கொடூர பயங்கரவாதம் எப்போது வேண்டுமானாலும் தாக்குகிறது.

 பலவீனமான அரசாங்கம், கையா லாகாதது மற்றும் திறமையற்றது. தேசத்தைக் காக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள்”என விளம் பரம் செய்தது இதே பாஜகதானே.

அன்றைய தாக்குதலுக்குப் பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர், மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பதவி விலகினர். அன்று பாஜக செய்த அதே விமர்ச னங்கள், விளம்பரங்கள் சரியானவை என்றால், இன்று அவர்கள் அதனைத் தங்களுக்கும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

 தில்லி செங் கோட்டை கார் குண்டு வெடிப்பிற்குப் பொறுப்பேற்று யார் யார் பதவி விலகப் போகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். 

பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். அதேசமயம், நமது பாதுகாப்பில் ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்யவும், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு உடனடியாக முன்வர வேண்டும்.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

15000 கோடி வீட்டை காலி செய்ய

இரும்புக்கை மாயாவி

2025ல் தங்கம் விலை