ஒரே திரைக்கதை
ஹரியானா,
ராஜஸ்தான்,
தில்லி, மகாராஷ்டிராவைப்
போல
ஒரே திரைக்கதையில் அமைந்த
பீகார் வாக்கு எண்ணிக்கை
பாட்னா வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) முறைகேடு, தேர் தல் நேரத்தில் வாக்காளர்களு க்கு லஞ்சம் போன்று பெண்களுக்கு ரூ.10,000 பணம், வாக்குபதிவில் வாக்கு எண்ணிக்கை யில் பல்வேறு சர்ச்சை உள்ளிட்ட குற்றச்சாட்டு க்கு இடையே பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி (சிராக்), இந்துஸ்தான் அவாம் (மஞ்சி), ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா) வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
ஆனால் பாஜக - தேர்தல் ஆணைய கள்ளக் கூட்டணி குற்றச்சாட்டுக்கு பின்பு நடைபெற்ற மக்களவை மற்றும் ஹரியானா, ராஜஸ்தான், தில்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைப் போல வே, பீகார் வாக்கு எண்ணிக்கை முடிவும் அமைந் துள்ளது.
அதாவது ஒரே திரைக்கதையில் வாக்கு எண்ணிக்கை அமைந்துள்ளது. அது என்னவென்றால், வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் மற்றும் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் பாஜக அதன் கூட்ட ணிக் கட்சிகள் முன்னிலை பெறாமல் இருக்கும்.
அதன்பிறகு முன்னிலை பெறும் பாஜக, கூட்ட ணிக் கட்சிகள் இறுதி வரை முன்னிலையிலேயே நீடிக்கும். கூட்டணிக் கட்சிகள் பின்தங்கினால் கூட பாஜக ஒரு சுற்றில் கூட பின்னடைவை சந்திக்காது. இறுதியில் பாஜக கூட்டணியே வெல்லும்.
ஹரியானா, ராஜஸ்தான், தில்லி, மகாராஷ்டிராவில் இவ்வாறு தான் நிகழ்ந்தது. இதே திரைக்கதையில் தான் தற்போது பீகாரி லும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக் கை தொடங்கியது.
9.30 வரை சுமார் 1.30 மணி நேரம் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணி (ஆர்ஜேடி, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்-எல்), விஐபி) 111 தொகுதிகளுடன் முன் னிலை வகித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி யோ 109 தொகுதிகளுடன் பின்னடைவை சந்திக்கும் பாதையில் இருந்தது.
ஆனால் காலை 10.15 மணியளவில் திடீரென தேசிய ஜனநாயக கூட்டணி மின்னல் வேகத்தில் முன்னிலை வகித் தது. மதியம் 12 மணி அளவில் “இந்தியா” கூட்ட ணியின் முன்னிலை வகிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை 50க்கும் கீழாக குறைந்தது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு தொகுதியில் கூட பின்னடைவை சந்திக்காமல் 202 தொகுதிகளில் (பாஜக 89, ஐக்கிய ஜனதா தளம் 85, லோக் ஜனசக்தி 19, இந்துஸ்தான் அவாம் 5 மற்றும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 4) வெற்றி பெற்றது. ஆனால் “இந்தியா” கூட்டணி (ஆர்ஜேடி - 25, காங்கிரஸ் - 6, சிபிஐ (எம்-எல்) - 2, சிபிஎம் - 1, ஐஐபி - 1) மற்றும் ஒவைசி தலைமையிலான மஜ்லிஸ் கட்சி 5 இடங்களை வென்றது.
பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் ஆரம்பத்தில் 5 இடங்களில் முன்னிலை வகித்தது. ஆனால் இறுதியில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதாரித்த ஆர்ஜேடி முகவர்கள் கெஜ்ரிவால் பாணியில் தேஜஸ்வியை தோற்கடிக்கும் சதி முறியடிப்பு
2025 பிப்ரவரி மாதம் நடைபெற்ற தில்லி சட்டமன்ற (மொத்தம் 70 இடம்) தேர்தலில் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி யது.
இந்த தேர்தலில் ஆம் ஆத்மி தலைவரும், தில்லி முன்னாள் முதல மைச்சருமான கெஜ்ரிவால், புதுதில்லி தொகுதியில் தோல்வி யடைந்தார். 2 முறை முதலமைச்சராக பதவியில் இருந்த கெஜ்ரிவால் எப்படி தோல்வியடைந்தார் என்ற அதிர்ச்சிக்கு இடையே, புதுதில்லி தொகுதியின் வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் மற்றும் ஏதேனும் தில்லு முல்லு செய்யப்பட்டதா? என்ற சந்தேகம் கிளம்பியது.
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே முன்னிலை, பின்னடைவு என கெஜ்ரிவால் ஒவ்வொரு சுற்றிலும் ஏற்றம், இறக்கத்தை கண்டார். ஆனால் கடைசி 5 சுற்றில் தொடர்ச்சியாக பின்னடைவில் இருந்த கெஜ்ரிவால் இறுதியில் 4,089 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் பர்வேஷ் வர்மாவிடம் தோல்வியை சந்தித்தார்.
இதே போல தான் பீகார் சட்டமன்ற தேர்தலில் ராக்கோபூர் தொகுதியில் போட்டியிட்ட ஆர்ஜேடி தலைவரும், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி, பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரிடம் ஒவ்வொரு சுற்றிலும் மல்லுக்கட்டினார்.
அதாவது கெஜ்ரி வால் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிகழ்ந்தது போலவே ராக்கோபூரில் இழுபறி நீடித்தது. தேஜஸ்வி தோல்வியின் விளிம்பிற்கு சென்றார். ஆனால் கடைசி 6 சுற்றில் ஆர்ஜேடி முகவர்கள் சுதாரித்து, விளக்கத்துடன் வாக்கு எண்ணிக்கையை கவனிக்க இறுதியில் 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
சட்டமன்றத்தில் தேஜஸ்வியை அனுமதிக்கக் கூடாது என்ற ஒரே காரணத்திற்காக தான் வாக்கு எண்ணிக்கையில் பாஜக - தேர்தல் ஆணையம் கூட்டுச்சதியில் ஈடுபட்டது என ஆர்ஜேடி மூத்த தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஒருதொகுதிக்கே இவ்வளவு சந்தேகம் என்றால், மற்ற 242 தொகுதிகளின் நிலைமை எப்படி இருக்குமோ? என கேள்விகளும் கிளம்பியுள்ளன.
தேர்தல் ஆணைய அடாவடி!தேர்தல் ஆணையத்தின் டிஜிட்டல் பணிச்சுமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பயிற்சி வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடு முழுவதும் தமிழ்நாடு, மேற்குவங்கம் உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் சிறப்புப் பணி (எஸ்ஐஆர்) தற்போது நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) வீடு வீடாகச் சென்று வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்த பிறகு, டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சிலிகுரி, ஹவுரா, பரக்பூர், பராசத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பயிற்சி வகுப்புகளில் இருந்து அலுவலர்கள் வெளிநடப்பு செய்து, தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ஆசிரியர்களாக இருப்பதால், தங்களது அன்றாடப் பள்ளிப் பணிகளுடன், தேர்தல் ஆணையத்தின் இந்த கூடுதல் சுமையைச் சமாளிக்க முடியவில்லை என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திடீரென டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யச் சொல்வதாகவும், அதற்குரிய முறையான பயிற்சி அளிக்கப்படவில்லை என்றும், போதுமான தரவு உள்ளீட்டாளர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, வயது முதிர்ந்த பல அலுவலர்கள், இந்த டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் செயலிகளைப் பயன்படுத்துவதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், நள்ளிரவில் செல்போனில் அழைத்து திடீர் உத்தரவுகள் பிறப்பிப்பது
மாலும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பாதிப்பதாகவும் அவர்கள் புகார் கூறியுள்ளனர். எனவே, பணிச்சுமையைக் குறைக்க உள்ளூர் அளவில் தரவு உள்ளீட்டாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்றும், படிவங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்