கரப்பான் பூச்சி ஜனதா கட்சி?

இந்தியாவில் படித்த பட்டதாரி இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மதுரையில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ஒன்றிணைந்து நடத்திய கரப்பான்களின் பேரணி ( Madurai Cockroach Rally ) ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சமூக வொலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வரும் கரப்பான் ஜனதா கட்சி ( Cockroach Janata Party – CJP) இயக்கத்தின் எதிரொலியாக இந்த வித்தியாசமான நையாண்டிப் போராட்டம் மதுரையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் (Gandhi Museum) இருந்து இன்று (மே 24, 2026) பிற்பகலில் இந்த விசித்திரப் பேரணி புறப்பட்டது. 

கைகளில் பதாகைகளையும், தங்களின் குறியீடாக கரப்பான் பூச்சி படங்களையும் ஏந்தியபடி வேலையில்லா பட்டதாரி இளைஞர்கள் தமுக்கம் தமிழன்னை சிலை நோக்கி பேரணியாகச் சென்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்களுக்கு தகுதியான வேலைவாய்ப்புகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், அரசுத் தேர்வு முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கோஷமிட்டபடி இளைஞர்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர்

சமீபத்தில் நீதிமன்ற விசாரணையின் போது, சமூக வலைத்தளங்களில் இயங்கும் சில வேலையற்ற இளைஞர்களைக் குறிக்கும் வகையில் “கரப்பான் பூச்சிகள்” என விமர்சனம் எழுந்ததாக இணையத்தில் கடுமையான சர்ச்சை வெடித்தது.

 இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கொதித்தெழுந்த Gen Z இளைஞர்கள் தங்களின் அவமதிப்பையே ஆயுதமாக மாற்றிக்கொண்டனர். சமூக வலைத்தளங்களில் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற நையாண்டி (Satirical) பக்கங்கள் தொடங்கப்பட்டு, அது லட்சக்கணக்கான ஃபாலோயர்களைப் பெற்று தேசிய அளவில் ட்ரெண்டானது.

வந்த விஷயம், தற்போது வீதிப் போராட்டமாக மாறியுள்ளது. அணுகுண்டு போட்டாலும் சாகாத ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிதான். 
எவ்வளவு ஒடுக்கினாலும் வேலை கேட்டு சாமானிய இளைஞர்களாகிய நாங்கள் போராடிக் கொண்டே இருப்போம்” என்று பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் ஆவேசமாகத் தெரிவித்தனர். 
தொடர்ந்து தள்ளிப்போகும் அரசுப் பணிகள், தேர்வுத் தாள்கள் கசிவு மற்றும் படித்த பட்டதாரிகளுக்கு தகுதியான வேலைவாய்ப்பு வழங்கப்படாதது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த ‘கரப்பான் பூச்சிகளின் பேரணி’ மிக வலுவாக அரங்கேறியுள்ளது

இப்போது விசிலுக்கு போட்டி கரப்பான் பூச்சியா?





எடிசன் மிஞ்சியவர் !

டில்லியை சேர்ந்த ஐஐடி பட்டதாரியான  குருதேஜ் சந்த், அமெரிக்காவிற்கு பிஎச்டி படிப்புக்காக சென்றவர் அங்கு விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனையை மிஞ்சி அமெரிக்காவின் 7வது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாளராக உருவெடுத்துள்ளார்.

இந்தியா தொழில்நுட்பத் துறை பல்வேறு சாதனைகளை எட்டி உள்ளது. உலகளவில் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களாகவும், விஞ்ஞானிகளாகவும் இந்தியர்கள் வலம் வருகின்றனர்.

உலகையே ஆட்டி படைக்கும் கூகுளின் தலைமை பொறுப்பில் இந்தியாவை சேர்ந்த சுந்தர் பிச்சை திகழ்ந்தார். 


இறவரைப் போன்றே அமெரிக்காவில் புகழப்படும் மற்றுமொரு இந்தியராக உருவெடுத்துள்ளார் குருதேஜ் சந்த். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.

அப்படி இவர் என்ன செய்தார் என கேட்கலாம். 


விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனின் காப்புரிமை சாதனையான 1093-ஐ முறியடித்து, அமெரிக்காவில் மட்டும் 1400-க்கும் அதிகமான காப்புரிமைகளையும், உலகளவில் 2200-க்கும் மேற்பட்ட காப்புரிமைகளையும் பெற்றுள்ளார்.


 உலகளவில் அதிக காப்புரிமைகளை வைத்துள்ள டாப் கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். அமெரிக்க வரலாற்றில் 7வது அதிக காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்பாளராக இவர் உயர்ந்துள்ளார்.


இந்திய வம்சாவளியை சேர்ந்த குர்தேஜ் சிங் சந்து, பஞ்சாப் மாநிலம் அமர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர். குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடங்கி, பின்னர் டில்லி ஐஐடி-யில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முதுகலை பட்டம் (M.Tech) பெற்றார். 


பிஎச்டிக்காக அமெரிக்காவிற்குச் சென்றவர் அங்குள்ள ‘வட கரோலினா பல்கலைக்கழகத்தில்’ இயற்பியலில் தனது முனைவர் பட்டத்தை (Ph.D) முடித்தார்.

பின்னர் உலகளாவிய மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சியில் முக்கிய நபர் ஆனார். 35 ஆண்டுகளாக மைக்ரான் டெக்னாலஜியுடன் இணைந்து பணியாற்றுகிறார். 


நவீன எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கணினித் துறையில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் தொழில்நுட்பத்தில் மாபெரும் கண்டுபிடிப்புகளை இவர் செய்துள்ளார். நவீன டிஜிட்டல் யுகத்தின் முதுகெலும்பாக இருக்கும்.


 ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் டேட்டா சென்டர்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘மெமரி சிப்கள்’, சிறியதாகவும், வேகமாகவும் செயல்பட இவரது கண்டுபிடிப்புகள் மிகவும் அடிப்படையாக அமைந்துள்ளன. 


இப்போது அந்த நிறுவனத்தின் முக்கிய பொறுப்பில் வழிநடத்தி கொண்டிருக்கிறார்.

குர்தேஜ் சிங் சந்துவின் அசாதாரண பயணத்தை சுட்டிக்காட்டி, உலகளவில் இந்தியர்களின் திறமை பறைசாட்டப்படுவதை வலைதள வாசிகள் வைரலாக்கி வருவதோடும் அவரை பாராட்டியும் பதிவிட்டு வருகின்றனர். 







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

இரும்புக்கை மாயாவி

15000 கோடி வீட்டை காலி செய்ய

2025ல் தங்கம் விலை