இடுகைகள்

அகதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாயகன் மோடி?

படம்
.2013-ம் ஆண்டிற்கான 'டைம்ஸ்' இதழின் சிறந்த நபரை தேர்வு செய்ய டைம்ஸ் இதழ் ஆன்லைனில் நடத்திய வாக்கெடுப்பில் பதிவான ஓட்டுகளின் அடிப்படையில் டைம்ஸ் இதழ் சர்வதேசத் தலைவர்கள், தொழில் முனைவோர், பிரபலமானவர்கள் என 42 பேரை இறுதியாகப் பட்டியலிட்டுள்ளது. இந்த 42 பேரில், 2013-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபர் யார் என்பதை அடுத்த மாதம் அறிவிக்க இருக்கிறது. இந்தப் பட்டியலில், ஜப்பான் பிரதமர் சின்ஷோ அபே, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப் சாஹி, அமேசான் சி.இ.ஓ. ஜெஃப் பெசோஸ் மற்றும் அமெரிக்க ராணுவ ரக்சியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டிற்கான நபராக டைம்ஸ் பத்திரிகை அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவை தேர்வு செய்தது . குஜராத் முதல்வருமான நரேந்திர மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் மோடி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மோடி குறித்து ஆன்லைனில் ஓட்டளிக்கும் இடத்தில் " சர்ச்சைக்குரிய இந்து தேசியவாதி, குஜராத் மாநிலத்தின் முதல்வர், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டை ஆளும் காங்கிரஸ் கட்சியை பதவிய...

உலக அகதிகள் தினம்.

படம்
ஜூன் 20ம் தேதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இவர்களுக்கு உள்ள உரிமைகளை, திரும்ப அவர்களுக்கு வழங்கவேண்டும். அவர்களும் சமூகத்தில் மற்றவர்களைப் போல நடத்தப்பட வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். கடந்த 6 மாதங்களில் மட்டும் 16 லட்சம் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சமடைந்து உள்ளதாக ஐ.நா.சபை அறிவித்துள்ளது. 2011ம் ஆண்டு கணக்கின் படி, உலகளவில் 1 கோடியே 52 லட்சம் பேர் அகதிகளாக வாழ்கின்றனர் என, யூ.என்.எச்.ஆர்.சி., ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக ஆக்கப்பட்டவர்கள் பலர். இவ்வாறு அகதிகளாக உள்ளவர்களுக்கு, அந்தந்த நாடுகள் சிறப்பு திட்டங்கள் மூலம், மறுவாழ்வு அளிக்க வேண்டும்.  அகதிகள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு முயற்சி எடுக்க வேண்டும் என யூ.என்.எச்.ஆர்.சி., வலியுறுத்துகிறது. 2012 ஆம் ஆண்டு மட்டும் 7.6 மில்லியன் மக்கள் அகதிகளாகியுள்ளனர். 1994 ஆண்டுக்குப் பிறகு அதிகரித்த மிகக...

கொடூரன் வரவு

படம்
 என்னதான் தமிழர்கள்  தங்களை இந்தியர்களாக எண்ணிக்கொண்டிருந்தாலும்,செயல் பட்டா லும் வடக்குத் தலைவர்களும்-,இந்திய ஆட்சியாளர்களும் தமிழர்களை இந்தியாவின் இரண்டாம்தர குடி மக்களாக மட்டுமே எண்ணுகிறார்கள். தமிழத்தில் இருந்து ஆட்சி அமைக்கத் தேவையான மக்களவை உறுப்பினர்கள் மட்டும்தான் அவர்களுக்கு தேவை. மற்றபடி ராணுவம்,தொழிற்துறை,ரெயில் வழி போக்குவரத்து ,நிதி உதவி வரை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் வழங்கப்படூகிறது. இதெல்லாம் கூற காரணமே வெறு. இலங்கையில் தமிழர்களையும்,தமிழர்களின் அடையாளங்களையும் அழித்து வரும் கொடூரன் ராஜபக்ஷேவை இந்திய அரசு சிகப்பு கம்பளம் விரித்து வரவெற்பதைத்தான் சொல்லுகிறே ன் . கொஞ்சம் கூட அவமானம்-கூச்சம் இல்லாமல் அவர் இந்தியாவுக்கும்  தென் மாநிலங்களுக்கும் வந்தாலும் அவரை ஓடிச்சென்று வரவேற்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் குற்ற உணர்வே இல்லாமல் போய் விட்டது.ராஜபக்சே இன்று வரை தமிழர் கொலைகளுக்கு ஐ.நா.வால் குற்றம் சாட்டப்பட்ட ஒரு போர் குற்றவாளிதான். ஈழத்தமிழர் அழித்தொழிப்பில் சிங்க்களவெறியர்களுடன் கூட்டணி அமைத்து செயல்பட்ட மன்மோகன்...

செலவுகள்

படம்
சட்டமன்ற அஇஅதிமுக கொறடா ப.மோகன் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவி .சண்முகம் அமைச்சர் ,கட்சி  பொறுப்புகளில்  இருந்து கழட்டி விடப்படுவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். சி.வி.சண்முகம் வகித்து வந்த வந்த வணிகவரித்துறை, பதிவுத்துறை ஆகியவை அமைச்சர் பி.வி. ரமணா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.  சி.வி.சண்முகம் துணை சபாநாயகர் ஆக நியமிக்கத்தான் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து விலக்கப்பட்டிருக்கலாம் . சமூக நலத்துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் பா.வளர்மதிக்கு சத்துணவுத் திட்டத்துறை கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. , ஊரகத் தொழில்துறை அமைச்சராகப் பதவி வகித்த எம்.சி.சம்பத்திற்கு சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகப் பதவி வகித்து வரும் என்.ஆர்.சிவபதிக்கு கூடுதலாக சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள், பணியாளர் நலன் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்து...

காணாமல் போனவர்கள்.....

படம்
"நாடு முழுவதும் 55 ஆயிரம் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு கடிதம்அனுப்பியுள்ளது. டில்லியை சேர்ந்தவர் சர்வாமித்ரா .இவர் வழக்குரைஞர் .இவர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல நோக்கில் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்  "நாடு முழுவதும் 55 ஆயிரம் குழந்தைகள் மாயமாகி காணாமல் போய் இருப்பதாகவும், இது குறித்து அரசு தரப்பில் எவ்வித முறையான பதிலும் இல்லை என்றும் , இவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் முழு நடவடிக்கை எடுக்க வேண்டும்"  என்றும் கேட்டிருந்தார்.   இந்த வழக்கு நீதிபதி அப்தாப் ஆலம் தலைமையிலானஇருக்கை முன் வந்தது. 55 ஆயிரம் சிறார் காணாமல் போனது பற்றி கவலை தெரிவித்த நீதிபதி , வழக்கில் இது தொடர்பாக மேலும் விளக்கம் அளிக்குமாறு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் விளக்கமறியல்  அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். சர்வாமித்ரா என்ன கணக்கில் 55000 குழந்தைகள் காணாமல் போனதாக வழக்கு தொடுத்தார் என்று தெரியவில்லை. தினசரி நாளிதழ்களில் வ...

இந்திய அரசின் "தில்"

படம்
நமது இந்திய அரசுக்கு கொஞ்சம் லொள்ளு அதிகம்தான். சிங்களனுக்கும் தமிழனுக்கும் ஆக மாட்டேன் என்கிற விடயம் தெரிந்தும் மீண்டும் ,மீண்டும் தமிழ் நாட்டிலேயா சிங்கள படையினருக்கு கடற் பயிற்சி,வான் பயிற்சி,தரை பயிற்சி,கழுதை பயிற்சி என்று கொடுக்கும் தில் ரொம்பவே இருக்கிறது. ஏன் .இந்தியாவில் வேறு பயிற்சி அளிக்க இடமே இல்லையா? இந்தியாவில் இலங்கை ராணுவத்துக்கு பயிற்சி அளிக்காதே.அவர்கள் அந்த பயிற்சியின் மூலமே அங்குள்ள தமிழ் மக்களை கொன்று குவிக்கிறார்கள் என்றுதானே இங்குள்ள கட்சியினர்,அரசியல் வாதிகள் சொல்லுகிறார்கள். அதையும் மீறி இந்தியாவில் பயிற்சி அளிப்பது தவறு. ஆனால் அதையும் தமீழ் நாட்டிலேயே கொடுப்பதஇந்திய அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான போக்கு என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டியதிருக்கிறது. இதை இந்திய அரசின் தில் என்பதை விட கொழுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். அப்படி பயிற்சி கோடுத்துதானாக வேண்டும் இது எல்லாம் அரசு கொள்கை முடிவுகள் என்றால் பயிற்சி கொடுக்க வேறு தளங்களே இந்தியாவில் கிடையாதா என்ன? அதிலும் தமிழனை அவமானப்படுத்தவே திட்டமிட்டு இந்திய அரசு செய்வதாக எடுத்துக்கொள்ளத்தான் வேண்டுமா? ...

ஈழமாவது.......வெங்காய..........

படம்
இலங்கையில் எல்லோரும் ஒன்று பட்ட இலங்கையை கேட்கும் போது தமிழ் நாட்டில் உள்ளவர்கள்தான் தனி நாடு கேட்கிறீர்கள் ஏன்?என்று இந்திய சகோதரி சுஷ்மா சுவராஜ் மதுரை தாமரை சங்கமத்தில் பாஜக மாநாட்டில் கேள்வியை எழுப்பியுள்ளார்.அத்துடன் நாங்கள் தமிழர் முகாம் மட்டும்தான் சென்றோம் அங்குள்ளவர்கள் யாரும் தனி ஈழம் பற்றியே பேசவில்லை.என்றும் கதைத்துள்ளார். இவர்கள் தமிழர்களுடன் தனியே பேசி அவர்கள் கருத்தைக்கேட்டார்களா? சிங்கள படையினர் அல்லது அதிகாரிகள் இல்லாத நிலையில் பேசினார்களா?என்றால் இல்லை.ராஜபக்‌ஷே ஏற்பாடு செய்திருந்த முகாம்களுக்கு சென்றனர்.அங்கு தேர்ந்தெடுத்த கருணா,டக்ளஸ்,சம்பந்தன் போன்ற தமிழர்களுடன்,தலைவர்கள் ஆக்கி வைக்கப்பட்டவர்களுடன் பேசினர்,பக்‌ஷே அளித்த சாப்பாட்டை தின்று விட்டு அவர் ஒதுக்கிய ஓட்டல் அறையில் படுத்து விட்டு தன் மகளுடன் பக்‌ஷே தந்த விருந்தை மூக்குபிடிக்க தின்று விட்டு அவர் கொடுத்த அட்டிகையை வாங்கி விட்டு வந்து விட்டவர்கள் இப்படித்தானே சொல்லுவார்கள்.பேசித்திரிவார்கள். பக்‌ஷேயுடன் தனி விருந்தும் பரிசு பொருள் பெறுவதும் கூடாது என கூறிதானே சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது...

சூடான மனது

படம்
ஈழத் தமிழர்களை சிங்கள அரசு இனப் படுகொலைதான் செய்தது என்பதற்கு இன்னும் ஆதாரங்கள் கிடைத்துவருகிறது. 2008-ம் ஆண்டு கிளிநொச்சி, முல்லைத் தீவு போன்ற தமிழர்கள் பகுதியிலலிலங்கை அரசுஎடுத்த மக்கள் தொகைக்கும்,தற்போது இலங்கை அரசு வெளியிடப்பட்ட 2009-ம் ஆண்டு வன்னிப் போரில்அப்பகுதிகளில் இருந்து வெளியேறியதாகக் காட்டப்பட்ட மக்கள் தொகைக்கும் இடையில் காணப்படும் வித்தியாசம்1,46,679. இந்த ஈழத்தமிழர்களின் நிலை என்ன ஆனது என்ற கேள்வி தற்போதுஎழுந்துள்ளது. இந்தவித்தியாசம் குறித்து இலங்கை மீது பல நாடுகள் கேள்விகளை எழுப்பியுள்ளது. ராஜப்பு ஜோசப்பு என்பவர் தகுந்த ஆவணங்களுடன் முன்வைத்த இந்த தகவல்கள் தற்போது சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத் தினைப் பெற்றிருந்ததோடு, பல நாடுகள் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளன.இதன் மீதுநடவடிக்கை எடுக்க ஐ.நா.முயற்சிக்க வேண்டும்,இப்போது உள்ளது போல் வெறும் அறிக்கைகளை மட்டும் விட்டு,விட்டு தனது கடமை முடிந்தது என்று இருந்துவிடக்கூடாது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையிலேயே, 2009-ம் ஆண்டு முதல் 5 மாதங்களில் மட்டும் 40 ஆயிரம் தமிழ் மக்கள் படுகொலை செய்...