இடுகைகள்

இந்தியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேட் இன் சீனா

படம்
  சீன ஏஐ சாட்பாட் டீப்சீக்கின் எழுச்சி உலகளவில் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. ஆனால், சீனாவின் வளர்ச்சியைக் கூர்ந்து கவனிப்பவர்களுக்கு இந்த வெற்றி ஆச்சரியமளிக்கவில்லை. ஏனென்றால், ' மேட் இன் சீனா 2025' என்ற லட்சியத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் தயாரிப்புகளில் தனது நிபுணத்துவத்தை சீனா மெதுவாக வளர்த்து வருகிறது. ஆய்வாளர்களைப் பொறுத்தவரை, டீப்சீக்கின் வெற்றி என்பது ஒரு பிரமாண்ட திட்டம் வெற்றியடைந்தது என்பதற்கான மற்றுமொரு சான்று. 'மேட் இன் சீனா 2025' எனும் திட்டம் 2015-இல் சீன அரசால் அறிவிக்கப்பட்டது. சீன பொருட்கள் என்றால் மலிவான மற்றும் குறைவான தரம் கொண்டவை என்ற அடையாளத்தை மாற்றுவதே அத்திட்டத்தின் குறிக்கோளாக இருந்தது. அதன்படி, 2025ஆம் ஆண்டுக்குள் சீனா ஆதிக்கம் செலுத்த வேண்டிய பகுதிகளாக பத்து தொழில்நுட்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், மின்சார கார்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பேட்டரி தொழில்நுட்பம் போன்ற துறைகள் அதில் அடங்கும். இதில் குறிப்பிட்ட சில தொழில்நுட்பங்களில் சீனா...

50கோடிகள்

படம்
  எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும். தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்ப...

ஒரே தேசம் ஒரே நாசம்?

படம்
  பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ‘ஒரே’தான்! எதற்கெடுத்தாலும் ‘ஒரே’ சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! ஒரே மதம் ஒரே மொழி ஒரே உணவு ஒரே கலாச்சாரம் ஒரே தேர்வு ஒரே தேர்தல் ஒரே வரி ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது ‘ஒரே’ மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது. ‘நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்’ என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்? பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந...

இனியும் அரசை நம்பாதீர்கள்

படம்
இந்நிலையிலும் நீட் தேவை யா   ஏற்கனவே முறையற்ற வகையில் நடைபெறும் “நீட்” தேர்வை இந்த கொரோனா காலத்திலும் நடத்தாமல் மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; மாநில அரசும் இத்தேர்வைக் கட்டாயம் எதிர்க்க வேண்டும்”  கொரோனா என்ற கொடூரத் தொற்றின் கோரத் தாண்டவத்தால், ஒட்டுமொத்தத் தேசமே அச்சத்திலும் பீதியிலும் முடங்கிக் கிடக்கும் இந்த நேரத்திலும், ஜூலை 26-ம் தேதி “நீட்” தேர்வு நடைபெறும் என்று நடைபெறும் என்று அறிவித்திருப்பது, மாணவ - மாணவியரைப் பற்றியோ, அவர்தம் பெற்றோர்களைப் பற்றியோ, மத்திய அரசுக்குத் துளியும் அக்கறையோ கவலையோ இல்லை என்றே தெரிகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஒடிசா, கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் நீட் தேர்வுக்கான தேதியைக் குறிக்கிறார்கள் என்றால், இது என்ன மாதிரியான மனநிலை என்பது புரியவில்லை. கார்ப்ப...

குரூரமான பெருமிதங்கள்

படம்
கேபிள் டி.வி ஆப்ரேட்டர்களின் மோசடி . விரைவில் உங்கள் வீடு தேடி வர இருக்கும் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் பற்றி சில விஷயங்கள் பகிர்ந்து இருக்கிறேன். அணைத்து வீடுகளுக்கும் இலவச அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் திட்டம் பல இடங்களில் கொடுக்க தொடங்கி விட்டார்கள் விரைவில் உங்கள் வீடு தேடி வரும். இந்நிலையில் இலவச செட்டப் பாக்ஸ் க்கு ஆப்ரேட்டர்கள் 500 ,600 ஏன் 1000 வரை கூட வசூலித்து வருகிறார்கள். எனவே ஏமாறாமல் இருக்க கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் குறித்த சில முக்கிய தகவல்களை நான் பகிர விரும்புகிறேன். ✴  முதலில் ..... 200 ரூ இன்ஸ்டாலேஷன் பீஸ் என்று கேட்பார்கள் . ஆம் அது உண்மை தான் அந்த 200 ரூ நாம் தர தான் வேண்டும். ✴  ஆக்டிவேஷன் பீஸ் என்று 100 ரூ கேட்பார்கள் கேட்டால் அரசு வசூலிப்பதை தான் கேட்கிறோம் என்பார்கள்...சுத்த பொய் அரசு அப்படிஎந்த கட்டணமும் கேட்க வில்லை. ✴  மாதம் தோறும் ரீச்சார்ஜ் என்று gst அது இது எல்லாம் சேர்த்து 200 ,250 க்கு கிட்ட தட்ட கேட்பார்கள். இது ஓரளவு சரி தான் ஆனால் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது ,அதில் 125 பேக்.. 175 பேக் என்று பல வகை உள்...