இணையத்திற்குப் புதியவரா?
நீங்கள் ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் சாதனத்தைப் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களைப் பற்றி கூகுள் ஏற்கனவே பல தகவல்களைப் பின் தொடர்ந்து வரும் செயல்பாட்டினை மேற்கொண்டிருக்கும். அப்படியா! என் அக்கவுண்ட்டை மூடிவிடவா? என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும். மூடுவதற்கும் கூகுள் எளிய வழிகளைத் தரும். ஆனால், நாம் அக்கவுண்ட்டினை மூடிவிட மாட்டோம். ஏனென்றால், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நாம் அப்ளிகேஷன்களை இறக்க வேண்டும் எனில், நமக்கு கூகுள் அக்கவுண்ட் ஒரு கட்டாயத் தேவை ஆகும். எனவே, இந்தச் சூழ்நிலையில், நாம் நம்மைப் பற்றிய டேட்டாவினை, எப்படி கூகுள் நிறுவனத்திற்குக் குறைவாகக் கொடுக்கலாம் என்று பார்ப்போம். பல செயலிகள் வழியாக, பல இடங்களில் நம்மைப் பற்றிய தகவல்கள், கூகுள் நிறுவனம் பெறும் வகையில் கசிகின்றன. இருப்பினும், சில முக்கிய வழிகளை இங்கு காணலாம். கூகுள் நமக்குத் தருபவை எல்லாம் இலவசமே. ஏனென்றால், கூகுள் என்னும் தொழில் நுட்ப அரக்கன், விளம்பரம் வழி பெரும் வருமானமே அதற்கு எக்கச்சக்கமாகும். இந்த விளம்பரங்கள் வழியாகவே, உங்களுக்கான விளம்பர வட்டம் கட்டப்படுகிறது. இணையத்தைச் சுற்றி வருகையில், இந்...