இடுகைகள்

.தக்காளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அட ..தக்காளி,!

படம்
தக்காளி.  இது ஒரு காய்கறி செடியினமாகும்.  இது கத்தரிக்காய், கொடை மிளகாய் போன்றே சோலானேசியெ அல்லது நிழல்சேர் செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இது அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் என்று அழைக்கப்படுகிறது.  இதன் தாயகம் தென் அமெரிக்கா.  குறிப்பாக பெரு, மெக்சிகோவில் இருந்து அர்ஜெண்டினா வரையான பகுதியில் அதிகளவில் பயிரிடப்படுகிறது.  சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படுகிறது. மெக்சிகோவில், அஸ்டெக் இனத்தவர் உணவுக்காக தக்காளியை பயிரிட்டனர்.  அந்நாட்டைக் கைப்பற்றிய ஸ்பானிய வெற்றி வீரர்கள் 16ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இதை ஸ்பெயினுக்கு கொண்டு வந்தனர்.  நாவாட்டில் என்ற மொழியில் டாமாட்டில் எனப்படும் வார்த்தையைக் கடன் வாங்கி இதை டாமாடே என்று அழைத்தனர்.  விரைவில், இத்தாலி, வட ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் இருந்த ஸ்பானிய குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள் இந்த புதிய சுவையை ருசிக்க ஆரம்பித்தனர். அந்த நூற்றாண்டின் பிற்பகுதியில், வட ஐரோப்பாவிற்கு தக்காளி அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் அது நச்சுத்தன்மையுள்ளதென்று கருதப்பட்டதால், தோட்...