இரு பி [சி] றந்த நாட்கள்.

தமிழ்த் திரையில் உலகத்தரமான நடிகர்கள் இல்லையா ? கண்டிப்பாக இருந்தார்கள்.இபோதும் இருக்கிறார்கள்.. அந்தப் பட்டியலில் இடம்பெறும் கலைஞர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவர்களில் ஒருவர்தான் "நோ ஒன் கேன் ரீபிளேஸ் பாலையா" என்று 85 வயது வயது நிரம்பிய முதியவராக கடந்த 1990ஆம் சென்னை வந்தபோது தமிழ்சினிமாவின் முதுபெரும் இயக்குநர் எல்லிஸ் ஆர் டங்கன் தெரிவித்தார். அவர் இயக்கிய வேறு எந்த நட்சத்திரத்துக்கும் இந்தப் பெருமையை அவர் கொடுக்கவில்லை. யார் இந்த பாலையா? இன்று வடிவேலு, கவுண்டமணி, நகைச்சுவை இணையாக டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை காட்சிகள் தமிழ்தொலைகாட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருவதே அவர் காலம் கடந்த கலைஞர் என்பதற்கு சாட்சி. தூத்துக்குடி மாவட்டம் சுண்டாங்கோட்டை என்ற சின்ன கிராமத்திலிருந்து அவர் வாழ்க்கை தொடங்குகிறது. ஆ கஸ்ட் 23ஆம் திகதி 1914ஆம் ஆண்டு பிறந்தார். இது பாலையாவின் நூற்றாண்டு. 40 ஆண்டுகள் சாதனை வில்லனாகவும், பிறகு நகைச்சுவை வில்லனாகவும் கலங்க வைக்கும் குணச்சித்திர வேடங்களிலும் சுமார் 40 ஆண்டுகள் கொடி ...