இடுகைகள்

ஜெயகாந்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எங்கள் ஜெயகாந்தன்!

படம்
ஜெயகாந்தன் இன்று நம்மோடு இல்லை என்பதை ஏற்க மனம் மறுக்கிறது.அவர் எழுதுவதை நிறுத்திப் பல காலம் ஆயிருந்தாலும், இலக்கியபயணத்தில் ஏதோ அவர் நம்மோடு எந்நேரமும் கூடவே இருப்பதான உணர்வு இருந்துகொண்டேதான் இருந்தது. இந்த ‘விட்டகலா’நினைவு எழுத்தாளனுக்கு மட்டுமல்ல வாசகருக்கும் இருந்தது.இத்தனைக்கும் அவர் கருத்துக்களோடு நாம் முரண்பட்டு நின்ற சந்தர்ப்பங்கள் பல உண்டு.  என்றாலும் இந்த மன நெருக்கம் அவரோடு நம் எல்லோருக்கும் ஏற்படக்காரணம் அவரது எழுத்து. ஒரு எழுத்தாளன் எழுத்தை மட்டுமே நம்பி(வேறு தொழில் ஏதும் பார்க்காமல்) வாழ்ந்துவிட முடியும் என முதன் முறையாக தமிழில் சாதித்துக் காட்டியவர் ஜெயகாந்தன். சந்தை எழுத்தாளர்களின் வணிக எழுத்துக்களைப்பற்றி நாம் இங்கு பேசவில்லை. ஒரு சமூக அக்கறையோடும் சமூகப்பொறுப்போடும் எழுதும் எழுத்தாளன் நின்று சாதிக்க முடியும் எனக் காட்டியது அவர்தான். பத்திரிகைகளை அண்டிப்பிழைக்கும் வாழ்வை முற்றிலுமாக உதறித்தள்ளித் தனித்து நடந்தவர் ஜெயகாந்தன். பத்திரிகைகள் அவர் வீட்டு வாசலில் காத்துக்கிடக்கும் நிலையை உருவாக்கி கம்பீரமான ஓர் எழுத்தாளனாக உயர்ந்து நின்ற ஆளுமை அவர். ...