உலகின் பயங்கரமான நகரம்
“கராச்சி” ------------ உலகின் அதி பயங்கரமான நகரம் என்ற பெயரை பாகிஸ்தானின் கராச்சி நகரம் பெற்றுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளின் முக்கிய நகரங்களில் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான சூழ்நிலை குறித்து தனியார் பத்திரிகை நிறுவனம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் கராச்சி நகரமே அதி பயங்கரமான நகரம் என்ற பெயரை பெற்றுள்ளது. இதுகுறித்து ஆய்வறிக்கையில், பாகிஸ்தானில் நிலவும் வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தால் வேலைவாய்ப்பை தேடி நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கராச்சிக்கு வருகின்றனர். அங்கு அரசியல்வாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் கூட்டு சதியால் மக்கள் பெருமளவு துன்புறுத்தப்படுகின்றனர். குறிப்பாக அதிகளவிலான மக்கள் கொல்லப்படுகின்றனர். மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக, கராச்சியில் ஷியா மற்றும் சன்னி பிரிவு முஸ்லிம்களிடையே பலத்த மோதல் நடைபெற்று வருகிறது. கடந்த 2011ம் ஆண்டில் 1723 பேரும், 2012ம் ஆண்டில் 2000க்கும் மேற்பட்டோரும் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ----------------------------------------------------------------------------------------------...