4ஜி அலைவரிசை
அண்மையில் Deloitte Mobile Consumer Survey 2016 அறிக்கை ஒன்று ஆய்வுக்குப்பின் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்தியாவில், 53% பேர், தங்களுக்கு வேண்டிய மொபைல் போன்களை, இணைய தளம் மூலமே வாங்கி வருகின்றனர். 39% பேர் கடைகளில் வாங்குகின்றனர். 2017ல், பலர், (45% பேர்) தாங்கள் 4ஜி அலைவரிசை பயன்பாட்டிற்கு நிச்சயம் மாறி விடுவதாகக் கருத்து தெரிவித்தனர். மொபைல் அழைப்புகள் இடையே 'கட்' ஆவதை நிறுத்த 1.5 லட்சம் இணைப்பு கோபுரங்கள் புதியதாக நம் நாட்டில் நிறுவப்படும். ஏற்கனவே, சென்ற ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், தொலை தொடர்பு நிறுவனங்கள், 1.3 லட்சம் இணைப்பு கோபுரங்களை நிறுவியுள்ளன. இந்தியாவில், இன்னும் 95 கோடி பேர் இணைய தொடர்பு இல்லாமல் வாழ்கின்றனர். Assocham-Deloitte என்ற இரு நிறுவன ஆய்வமைப்பு இதனைத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் போன் விலை படிப்படியாகக் குறைந்து வந்தாலும், உலகிலேயே மொபைல் டேட்டா கட்டணங்கள், இந்தியாவில் தான் குறைவாக இருந்தாலும், இணைய இணைப்பின்றி 95 கோடி பேர் இருப்பது வியப்புக்கும் வேதனைக்கும் உரியதாக உள்ளது என்று அறிவித்துள்ளது. ஆனால், நிச்சய...