மூட்டை கட்டிய அன்சுல் மிஸ்ரா.
மதுரையில் அழகிரி சாம்ராஜ்யத்தை ஒடுக்க நியமிக்கப்பட்டவர்கள்தான் சகாயம்,அடுத்து அன்சுல் மிஸ்ரா போன்ற மாவட்ட ஆட்சியர்கள். இப்போது அழகிரி அமுங்கி விட்டார். சகாயம் துணிகள் விற்க [கோ -ஆப் டெக்ஸ் ]அனுப்பப்பட்டு விட்டார்.கல்கோரி விவகாரத்தில் அதிமுகவினரிடமும் அடங்காமல் இருந்ததால் இப்போது அன்சுல் மிஸ்ராவும் வணிகவரி கணக்கு-வழக்கு பார்க்க ஒதுக்கப்பட்டூ விட்டார். கலெக்டராக இருந்த சகாயம் கடந்தாண்டு மே மாதம் கோ ஆப்டெக்ஸ் இயக்குனராக மாற்றப்பட்டார். திருவண்ணாமலை கலெக்டராக இருந்த அன்சுல் மிஸ்ரா மதுரைக்கு மாற்றப்பட்டார். 2012 மே 28ல் புதிய கலெக்டராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்றார். கிரானைட் மோசடி தொடர்பாக விசாரணை நடத்தி பல்வேறு உண்மைகளை இவர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார். பெரிய நிறுவனங்களுக்கு சீல் வைத்தார். கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. 800க்கு மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் ஆளுங்கட்சியினரின் பரிந்துரைகளை இவர் ஏற்கவில்லை. நேர்காணல் நடத்தி தகுதியானவர்களை மட்டும் நியமனம் செய்தார். இது ஆளும் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.வ...