படிப்பு அவசியம்
குளோபல் பிஸினஸ் சம்மிட் 2025 நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு விருந்தினராக லண்டன் யுனிவெர்சிட்டி காலேஜ் தலைவர் டாக்டர் மைக்கேல் ஸ்பென்ஸ் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் செயற்கை நுண்ணறிவு குறித்து பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.. குறிப்பாக மைக்கேல் ஸ்பென்ஸ் பேசுகையில், 'நம்முடைய மாணவர்களுக்கு மூன்று விஷயங்களை கற்று கொடுக்க வேண்டும். இயந்திரங்கள் தாமாகவே கொண்டிராத திறன்கள், இயந்திரங்களை எப்படி பயன்படுத்துவது, இயந்திரங்களால் என்னென்ன செய்ய முடியும். சமீபத்தில் ஐஐடி டெல்லி, எய்ம்ஸ் ஆகியவற்றுடன் லண்டன் யுனிவெர்சிட்டி காலேஜ் முக்கிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இது மருத்துவத் துறையில் செயற்கை நுண்ணறிவு அம்சங்களை கொண்டு வருவது தொடர்பானது. இதன்மூலம் புதிய சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளது. ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. எதை பற்றி கேட்டாலும் பதில் கிடைத்துவிடும். வருங்காலத்தில் எல்லா விஷயங்களையும் செயற்கை நுண்ணறிவு மூலமே கற்று கொள்ளலாம். அப்படி இருக்க எதற்காக படித்து பட்டம் பெற வேண்டும் என்று கேட்கின்றனர். அது தவறு. அனைவரும் படித்...