இடுகைகள்

ராமர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாலமும் -பாதுகாப்பும்

படம்
பாரதீய ஜனதா கட்சியின்  தலைவர் வி.கே. மல்கோத்ரா, " ராமர் பாலம் என்பது விலை மதிப்பில்லா தேசிய பாரம்பரியச் சின்னம் ஆகும். அதை எந்த விலை கொடுத்தாகிலும் பாதுகாக்க வேண்டும். ராமர் பாலத்தை தகர்க்காமல், மாற்றுப்பாதையில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்ற ஆர்.கே.பச்சவுரியின் அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும்.  ராமர் பாலத்தை மத்திய அரசு பாதுகாக்க தவறினால், நாடு தழுவிய போராட்டம் நடத்துவோம்."என்று  கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற விடாமல் செய்வதில்ல் இலங்கை அரசை விட பாஜக தான் முன்னணியில் இருக்கிறது. ராமர் பாலம் என்பதே இயற்கையாக அமைந்த கடலடியிலான மனல்திட்டு. அது இன்னமும் கொஞ்சம் உயரமாகயிருந்தால் ஒரு தொடர் தீவாகத்தான் தென்பட்டிருக்கும். இது போன்ற மணல் திட்டுகள் உலக மெங்கிலும் கடற் பகுதிகளில் பரவலாக ஆங்காங்கே காணப்படுகிறது. இந்திய பகுதியில் காணப்படும் அந்த திட்டு ராமர் கட்டிய பாலமாக பெயர் சூட்டப்பட்டதுதான் நம் நாட்டின் வளர்ச்சிப் பணிக்கு ஏற்பட்ட சோகம். ராமர் பாலம் விலை மதிப்பில்லா தே...