வறுமைக்கோடும் குறைந்தபட்ச ஊதியமும்...!
குறைந்தபட்ச ஊதியம் தீர்மானிப்பதற்கான அடிப்படைஅளவுகோல் என்னஎன்பது இந்தியாவில் வெகுகாலத்திற்குமுன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது. இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் மட்டுமல்லாது, 1990களில் உச்சநீதிமன்றத்தாலும் சில முன்னேற்றங்கள் காணப்பட்டது. இப்படி செய்யப்பட்ட பல திருத்தங்களுக்குப் பின்னர் நமது நாட்டில் தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவு கோல் என்னவாக இருக்கிறது? பேரா.பிரபாத் பட்நாயக் அடிப்படை அளவுகோல் குறைந்தபட்ச ஊதியத்திற்கான அடிப்படை அளவுகோலை தீர்மானிப்பதற்கு ஒரு அடிப்படை குடும்ப அலகாக கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் என்று 4 பேர் கொண்ட குடும்பம் எடுத்துக் கொள்ளப்படும். இதில் இரண்டு குழந்தைகளும் சேர்ந்து ஒருநுகர்வு அலகாகக் கணக்கிடப்படுவர். எனவே,ஒரு அடிப்படை குடும்பம் என்பது 3 நுகர்வுஅலகுகளைக் கொண்டதாகக் கணக்கிடப்படுகிறது. ஒரு குடும்பத்தின் ஒவ்வொரு நுகர்வு அலகும் ஒரு நாளைக்கு 2700 கலோரிகளை தனித்தனியாக நுகர்வதாக வைத்துக் கொள்வோம். அதாவது ஒட்டு மொத்தமாக ஒருஅடிப்படை குடும்பத்தின் நுகர்வு அளவு 8100 கலோரிகள் ஆகும். அந்தக் குடும்பத்திற்கு ஒருவருடத...