இடுகைகள்

தெரசா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மன்னிக்க முடியுமா – தெரசாவை?

படம்
“ உ லகத்திலேயே நீங்கள் பெரிதும் மதிக்கின்ற நபர் யார்? வாழ்க்கையில் ஒரேயொரு முறையாவது நீங்கள் நேரில் சந்திக்க விரும்பும் நபர் யார்?” இப்படியான கேள்விகளுக்கு கோடம்பாக்கத்தின் கதாநாயகிகள் அனைவரும் கூறும் பதில் ஒன்றுதான் –  அன்னை தெரசா . தெரசா கனவுக்கன்னிகளின் கனவுக் ’கன்னி’ அதாவது கனவுக் கன்னியாஸ்திரீ. அன்பு, அருள், அமைதி, அடக்கம். ’அ’ வில் தொடங்கும் அனைத்து எழுத்துக்களும் இந்த அன்னையைத் தான் அடைக்கலம் சேர்கின்றன. ஏழை நாடுகளின் ஏழை மக்களுக்கு இளைப்பாறுதல் தருவதற்காகவே பிறப்பெடுத்தேன் என்று கூறும் இந்த அன்னை எங்கிருந்து வந்தார். எதற்காக வந்தார் என்றெல்லாம் யாரும் கேட்பதில்லை – ’சாத்தான்களையும் விரியன் பாம்புக் குட்டிகளையும்’ தவிர. ”ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை தனது அரசியல் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக ஏவியிருக்கும் ஆயுதம் தான் அல்பேனியாவிலிருந்து அனுப்பப்பட்டிருக்கும் இந்த கன்னிகா ஸ்தீரி” “தனது காலனி ஆதிக்கப் பெருமிதத்தை நினைவு படுத்திக் கொள்ளவும், நீட்டிக்கவும் மேற்குலகம் நிறுவியிருக்கும் கிளைதான் அன்னை நடத்தும் இல்லம்” “மூன்றாம் உலகைச் குறையாடும் மேலை நாடுகள் தங...