ஈமு வாங்கலையா மாமு.
ஈமு கோழி . கொஞ்ச நாட்களாகவே தமிழக தொலைக்காட்சிகளிலும்-பத்திரிகைகளிலும் பரபரப்பாக விளம்பரம் வரும் கோழி. முட்டையில் இருந்து அதில் உள்ள கழிவுகள் வரை அனைத்தும் காசுதான், முதலீடு செய்தால் எங்கோ போய் விடுவீர்கள் . ஆனால் அதில் பலர் முதலீடு செய்த பின்னர் ஈமு பண்ணை உரிமையாளர்கள்தான் எங்கேயோ போய் விட்டார்கள்.தலை மறைவாகத்தான். ஈமு விளம்பரங்கள் வரும் போதே சில இதழ்கள் அதை நம்ப வேண்டாம் என்றுதான் எழுதி தள்ளினர். ஆனால் முட்டை தரும் பணக்குவியலை நம்பி இன்று முட்டையின் ஓடு கூட கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். அதில் ஒரு ஈமு கோழி முதலீட்டாளர் தான்திருப்பூர் மாவட்டம் கே.என்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம். அவர் தனது சொந்த கதையை -அல்லது ஏமாந்த கதையை கூறுகிறார். ''ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி எங்க ஊருக்கு ஈமு கோழி வளர்ப்புப் பத்தி பேசுறதுக்காக, கோபி செட்டிப் பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. பிரைட் லைவ்ஸ்டாக் இந்தியா (பி) லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திக் சங்கர் என்பவர் வந்திருந்தார். அவரோட பத்து விரலிலும் பத்து மோதிரங்களைப் போட்டுவந்து, 'இது அத்தனையும் ஈமு கொடுத்தது. ...