காத்திருக்கும்[ ஸ்டெர்லைட்] எமன்,,,,
Apr 23 ஸ்டெர்லைட் ஆலை ஆய்வு அனுபவம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடக் கோரிய வழக்கில் நீதிமன்ற ஆணைப்படி ஆய்வுகள் மேற்கொண்டதை விளக்கி, மதிமுக பொதுச் செயலர் வைகோ செய்தி வெளியிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு: "மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் ஜெய்தாபூர் என்ற இடத்தில் அணு மின் உலை அமைப்பதைக் கடுமையாக எதிர்த்து, ரத்தினபுரி மாவட்ட விவசாயிகளும், பொதுமக்களும் பலத்த கிளர்ச்சி செய்து வருகின்றனர். தங்கள் வாழ்விடத்தையும், ஆபத்து வருமுன் காக்கும் எச்சரிக்கையுடன் போராடும் இதே மக்கள்தான், 90-களின் தொடக்கத்தில், மராட்டிய மாநிலத்தில், அரசு அனுமதியோடு அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை, சுற்றுச்சூழலுக்கும், தங்களின் வாழ்வுக்கும் பெரும் நாசம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து, மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போதைய மதிப்பில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து அமைக்கப்பட்ட தொழிற்சாலையை, இயந்திரங்களை உடைத்து நொறுக்கினார்கள். பொதுமக்களின் எதிர்ப்பைக் கண்டு, அன்றைய மராட்டிய மாநில சரத்...