இன்னும் உயரும்

உரிமையைக் கேட்பதை அற்பத்தனமா ? உரிமையைக் கேட்பதை அற்பத்தனம் என்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல். தாங்கள் செய்ய வேண்டிய கடமையைச் செய்யச் சொன்னால் அதனை துரதிஷ்டவசமானது என்கிறார் அமைச்சர் பியூஸ் கோயல். இவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியைப் போல தலையாட்டிக் கொண்டிருந்தால்தான் சூப்பர் என்பார்கள்."ஒன்றிய அரசுக்கு வரி செலுத்துவதற்கு ஏற்ப மத்திய அரசு நிதியைப் பெற வேண்டும் என்ற சில மாநிலங்களின் கோரிக்கை 'அற்பத்தனமான சிந்தனை' மற்றும் 'துரதிர்ஷ்டவசமானது" என்று ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். "நாடு வளம் பெற வேண்டுமென்றால், பீகார், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஜார்க்கண்ட் போன்ற எட்டு வடகிழக்கு மற்றும் கிழக்கு இந்திய மாநிலங்கள் வளர்ச்சியடைய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார்" என்று பியூஸ் கோயல் பேசி இருக்கிறார். ஏன், இவைதான் இந்தியாவில் இருக் கிறதா? தமிழ்நாடும், கேரளாவும் கர்நாடகமும் மேற்கு வங்கமும் இந்தியாவில் இல்லையா? எங்கே இதைப் பேசி இருக்கிறார் தெரியுமா? அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) மற்றும் 'மாநிலங்களுக்கு இடையேயான வ...