படங்களில் மட்டுமே புன்னகைப்பார்

பொய்யாக கண்ணீர் கதை சொல்ல மனதுவரவில்லை. காரணம் மனசாட்சி. காலமானவர்களின் நல்லவற்றை மட்டுமே சொல்ல வேண்டும் என்பதும், சொல்வதும் காலகாலமாக வந்த ,வரும் பொய்மையான மரபு. சக மனித மரணம் தரும் வருத்தம் மட்டுமே. ஆகா.ஓகோ என்று கூற .ஒன்றும் இல்லை. அப்படி புகழும் அளவுக்கு நான் பிரமுகனும் அல்ல. 2000க்கு வங்கி முன் காத்திருப்பவர்களில் ஒருவன். சாதா தமிழக குடிமகன். முதல்வராக இருக்கையில் போட்ட கையெழுத்தினால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரில் நானும் ஒரு துளி. அவரால் வாழ்க்கையே ஆனது கேள்விக்குறி. இருந்து போன எதிர்காலத்தை சகிக்கமுடியாமல், எதிர் கொள்ள பயந்து என் சகாக்கள் வாழ்க்கையை செயற்கையாக முடித்துக்கொண்டதில் சிந்திய கண்ணீர் கோபம்,இயலாமையால் எரிந்து சாம்பலாய் போன மனதில் இருந்து வர மறுக்கிறது. உணர்ந்து போட்ட கையெழுத்துக்களில் பலர் வேலையை,வாழ்க்கையை பறித்த கை உணரவே இல்லாமல் பிறர் மூலம் கைநாட்டிட்டது காலத்தின் கட்டாயமா? இவைகளே மனதில் இருந்து வரும் இரங்கல் அறிக்கையாக இருக்கிறது. பொய்மை சொல்ல நினைத்தும் இயலாமை மட்டுமே வருகிறத...