தீ பரவுகிறது!

இந்தியாவில் தற்போது மொழி பிரச்சனை உச்சத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஆளும் திமுக இதை கடுமையாக எதிர்த்து வருகிறது. தேசிய கல்விக் கொள்கை மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டங்களில் கையெழுத்து போடாததால் தமிழ்நாடு ரூ.5 ஆயிரம் கோடி நிதியை இழக்கும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று கடிதம் எழுதி இருந்தார். இருந்தாலும் தமிழக அரசு தரப்பில், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று பதில் கடிதம் அமைச்சர் அன்பில் மகேஷ் மூலமாக அனுப்பப்பட்டது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இதை கடுமையாக எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாடு அரசு பற்ற வைத்த இந்த மொழிப்போர் தீ சர்வதேச அளவில் பரவ தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை எதிர்க்கப்படுவதை கன்னட மக்கள் பலரும் வரவேற்று உள்ளனர். கர்நாடகாவில் தேசிய கல்விக்கொள்கை ஏற்கனவே ஏற்கப்பட்டு விட்ட நிலையில்.. கன்னட மக்கள் இதை டிரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ் மக்கள் மீது எனக்கு எப்போதும் பொறாமை.. நம்ம கன்னடிக மக்களுக்கு...