"மின்னல் வேக 5- ஜி"
வயர்லெஸ் நெட்வொர்க்கிங் தொழில் நுட்பத்தில், அடுத்த புரட்சியாக 5ஜி இணைப்பு வர இருக்கிறது. இப்போதல்ல, வரும் 2020 ஆம் ஆண்டு இது உறுதி என, அண்மையில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு நம்முடைய ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க்கினை இணைப்பதில் முன்னணியில் இருப்பது 4ஜி தொழில் நுட்பமாகும். ஆனால், வர இருக்கும் 5ஜி தொழில் நுட்பம், தற்போது நாம் கனவில் மட்டுமே எண்ணிப் பார்க்கும் இணைப்பினைத் தர இருக்கிறது. நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் இணையத்தோடு இணைக்கப்பட்டு நமக்கு உதவ இருக்கின்றன. இந்நிலையைத் தான் Internet of Things (IoT) என அழைக்கின்றனர். கோடிக்கணக்கான சென்சார்கள், நாம் பயன்படுத்தும் சாதனங்கள், பாதுகாப்பு கட்டமைப்புகள், உடல் நலத்தைக் காட்டும் கருவிகள், கதவுகளில் அமைக்கப்படும் பூட்டுகள், கார்கள், கை, கால் மற்றும் பிற உறுப்புகளில் அணிந்திடும் சாதனங்களில் அமைக்கப்படும். ஏன், நாம் வளர்க்கு நாய் குட்டிகளின் காதுகளின் பின்னேயும் இந்த சென்சர் அமைக்கப்பட்டு, அது நம்மையும் நாயையும் வழி நடத்தும். இது குறித்து ஆய்வு நடத்திய கார்ட்னர் மை...