இடுகைகள்

அரசு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாமே தேசீய மொழிதான்.

படம்
 1 . தேர்தல் ஆணையர் நியமன முறைகேடு. 2.சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா தேர்தலில் ஒருசில மணி நேரத்தில் லட்சக் கணக்கில் வாக்களித்தது. இவ்விரண்டு வழக்கிலும் எல்லா ஆதாரங்களும் பாஜகவுக்கு எதிராக இருப்பதால் பாஜக அம்பலப்பட்டுள்ளது.இவ்விரண்டு முக்கியமான வழக்குகளில் பாஜக வுக்கு எதிராக தீர்ப்பு வரவுள்ள நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சங்ஜீவ் கன்னா வை மாற்ற திரைமறைவு வேலைகளை பாஜக செய்கிறது.அரசியல் சாசன அமர்வான ஐந்து நீதிபதிகள் குழுவில் உள்ள ஒரு சங்கிநீதிபதி சஞ்ஜீவ் கன்னா மீது ஒருசில குற்றச்சாட்டுகளை பேசியுள்ளார். சென்னை கோட்டத்தில் கடந்த 2024ம் ஆண்டு ரயில்களில் அடிபட்டு 1196 பேர் உயிரிழப்பு . மொழி சமத்துவமே திமுகவின் லட்சியம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். சும்மா கூட்டணி கீட்டணி பத்தி எல்லாம் கேட்காதீங்க.  பாஜக கீஜக பத்தி எல்லாம் ஆறு மாசம் கழிச்சு கேளுங்க.  இன்னும் 6 மாசம் கழிச்சு பாருங்க. அப்போ யார் யார் எங்கே இருக்குறாங்கன்னு தெரிஞ்சுடும்.   எல்லாமே தேசீய மொழிதான். நம் உயிருடன் கலந்திருக்கும்தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவர் எழுதும் ஆதிக்க மொழிகள்...

விவசாயிகளுக்கு விடிவு காலம் ? ? ?

படம்
தமிழ் நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் காவிரி டெல்டா பகுதி, இன்று காய்ந்து கருவாடாக காட்சி அளிக்கிறது.  அங்குள்ள விவசாயிகள், வெளியடங்களுக்கு பிழைப்புக்காக செல்லும் நிலை ஏற்பட்டு விட்டது.  விவசாய சங்கத்தினரோ, சென்னைக்கும், டெல்லிக்கும் படையெடுத்துச் சென்று போராடுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு விடிவு காலம் பிறக்க வில்லை. டெல்டா மாவட்டங்களில், 6- வது ஆண்டாக குறுவை சாகுபடியும் இந்த ஆண்டு நடக்க வில்லை. காரணம், மேட்டூர் அணையில் 10 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பதுதான்.  50 அடிக்கு தண்ணீர் இருந்தால் மட்டுமே, குறுவைக்கு தண்ணீர் திறக்கலாம் என்பது பொதுப்பணித்துறையின் விதியாகும்.  ஆனால், இந்த ஆண்டு இந்த மாத இறுதிக்குள், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்ட வாய்ப்பே இல்லை.  கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவ மழை பெய்ய தொடங்கி விட்டாலும், பெரிய அளவில் மழை பெய்ய வில்லை. இப்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை நீர், கர்நாடகத்திலுள்ள அணைகளுக்கு வர ஆரம்பித்துள்ளது என்பதை நாம் பார்க்க வேண்டும். இனி அந்த அணைகள் நிறைந...

பாஜக மறைத்த ஜிகா (த்) ? ?

படம்
2003-ஆம் ஆண்டில், தங்கள் நாட்டில் நிலவி வந்த சார்ஸ் வைரஸ் தொற்றை முழுமையாக மறைக்க முயன்றதாக சீனா மீது உலக நாடுகள் குற்றம்சாட்டப்பட்டது நினைவிருக்கலாம்.அதே வேலையை தற்போது குஜராத் பாஜக அரசு செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டு நவம்பர் முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலகட்டத்தில் நெருக்கமான சுற்றுப்புறம் இருந்த பகுதியில் ஜிகா வைரஸ் தொற்று இருந்ததாக குஜராத்தை சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்தனர். ஏறக்குறைய 30 நாடுகளில் நிகழ்ந்த ஏரளாமான பிறப்பு குறைப்பாடுகளுடன் ஜிகா வைரஸ் தொற்றுக்கு தொடர்புள்ளது. மைக்ரோசிஃபாலி எனப்படும் அசாதாரணமான வகையில் இருக்கக்கூடிய சிறிய தலைகள் மற்றும் தடை செய்யப்பட்ட மூளை வளர்ச்சியுடன் பிறக்கும் குழந்தைகளின் பிறப்பு குறைப்பாடுகள் இதில் உள்ளடங்கும். பெரும்பாலும், இந்த வைரஸ் கொசுக்களினால் பரவினாலும், பாலியல் உறவு மூலமாகவும் இது பரவக்கூடும். இந்தியாவில் ஜிகா வைரஸ் தோற்று பாதிப்பு இருந்த நபர்கள் குறித்து ஐநா சுகாதார முகமை வெளியிட்ட அறிக்கையில், 22 மற்றும் 34 வயதான இரு பெண்கள் மற்றும் 64 வயதான ஒரு ஆண் ஆகிய மூவருக்கு இப்பதிப்பு இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் ...

மோடியின் சேவை நாட்டுக்கு...?

படம்
பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது, என மோடி அரசு அறிவித்தது முதல், வரலாறு காணாத வகையில் நாட்டில் முற்றிலுமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுநாடெங்கிலும் பணப்பரிவர்த்தனை பெரியளவில் முட‌ங்கியதுடன் சிறு மற்றும் குறு தொழில்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் வங்கியில் வரிசையில் நின்று பணம் மாற்ற முயன்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட இதுவரை 40 பேர் வரை இறந்துள்ளனர்.  இனால் மத்திய அரசுக்கு எதிராக நாட்டில் அனைத்து மக்களும் கொந்தளித்து போயுள்ளனர். அவர்களை சில கடசியினர் தங்களுடன் இணைத்து போராட்டம் நாடு முழுக்க வெடிக்கும் சூழலும் நிலவுவதாக செய்திகள் பரவிவருகிறது.  முதல்வர்கள் அரவிந்த் கெஜ்ரிவால்,மம்தா பானர்ஜி ஆகியோர் அரசுக்கு மூன்று நாட்கள் கேட்டு விதித்துள்ளனர்.இந்த அணியில் மேலும் அகிலேஷ்,நிதிஷ் உட்பட்ட மேலும் பல முதல்வர்கள் இணையும் சூழல் உண்டாகியுள்ளது. அதை கூட அரசியலாக்க மோடி,பாஜக ,ஆர்.எஸ்.எஸ்,கூட்டணி எண்ணினாலும், வங்கிகளில் பணம் பற்றாக்குறையானதும்,பல வங்கிகள் இரண்டாயிரத்தை கூட மாற்றிக் கொடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.ஏ.டி....