சின்ன வெங்காயம்,.
சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும். வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால் பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூல...