"தூக்கம்" இருவகை
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி. ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம், தூக்கத்தில் ‘ரெம்’ தூக்கம், ‘நான் ரெம்’ தூக்கம் என்று இருவகை உண்டு. நாம் தூங்கும்போது இந்த இரண்டும் மாறி மாறி அலைபோல வரும். ‘ரெம் தூக்கம்’ (REM Sleep - Rapid Eye Movement Sleep) என்பது கண் அசைவுத் தூக்கத்தைக் குறிக்கும். இந்தத் தூக்கத்தில் மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டபடி இருக்கும். கனவுகள் வருகிற தூக்கம் இது. ‘நான் ரெம்’ தூக்கம் (NREM Sleep - Non Rapid Eye Movement Sleep) என்பது கண் அசையா தூக்கத்தைக் குறிக்கும். இது ஆழ்ந்த தூக்கம் உண்டாகிற நிலை. இதில் கனவுகள் வருவதில்லை. ஆனால் இந்த தூக்கம் வந்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு சிலருக்கு மட்டும் பேய்க்கனவு வந்து அலறி எழுந்திருப்பார்கள். தூக்கம் குறையும்போது உடலின் நலம்...