அக்கினி நட்சத்திரம்
அக்கினி நட்சத்திரம் ஆரம்பமாகி விட்டது.எப்படியும் இன்னும் 20நாட்களுக்கு வெப்பம் உடலை வருத்தத்தான் செய்யும் ஆனாலும் அதில் இருந்து சில சின்ன,சின்ன பாதுகாப்பு ஏற்பாடுகளால் வெப்பப் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். இந்த ஆண்டு அக்கினி நடசத்திரம் ஆரம்பம் கடலோர மாவட்டங்களில் குளுமையாக ஆரம்பித்து மலைப்பை தந்து விட்டது. கடலோர காற்று வீசியதால் முதல் மூன்று நாட்களுக்கு வெப்பம் உண்ரடப்படவில்லை.அதிலும் அக்கினி நடசத்திரத்துக்கு முன் இருந்த வெப்பத்தை வீட்டா தற்போதைய வெப்ப அளவு 5 டிகிரியில் வரை குறைவாம். சரி.இனி .. அதிக வெப்பநிலையை சமாளிக்கும் வகையில் நமது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காககுளிர்சாதன பெட்டி யில் வைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள், குளிர் நீர் ஆகியவற்றை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக கோடையில் கிடைக்கக்கூடிய பதனீர்,நுங்கு மற்றும் காய், கனிகளை உண்பதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருப்பதுடன், கோடை வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்தும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். இயற்கையை பொறுத்த வரை அந்தந்த கால நிலைக்கேற்ப...