மாற்று மென் பொருள்கள்.
நாம் பயன்படுத்தும் பல மென்பொருள்கள் தனியுரிமை மென்பொருள்கள்கள்தான் . அவை கட்டணம் செலுத்தி பயன்படுத்தவேண்டியவை என்றாலும் நாம் அந்த விபரம் தெரியாமல் அவற்றை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் . நாம் மட்டும் அல்ல உலகில் பலர் அப்படித்தான் அந்த மென்பொருட்களை அந்த நிறுவனம் சொல்கிறபடி திருட்டுத்தனமாகத்தான் பாவிக்கிறார்கள். ஒரு மென்பொருளை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கினால் அதனை அவர்கள் நிர்ணயித்துள்ள விதிகளின்படியே பயன்படுத்தவேண்டும். ஒரு கணினியில் மட்டுமே மென்பொருள் நிறுவப்பட வேண்டும் (பல கணினிகளில் நிறுவ பேக்கேஜ் கட்டண முறைகளும் உண்டு). மென்பொருளை பயன்படுத்துவதற்கு மட்டுமே இக்கட்டணம் பொருந்தும், மென்பொருளின் வடிவமைப்பு நிரலில் உங்கள் விருப்பம்போல் மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. நீங்கள் வாங்கிய பதிப்பிற்கு அப்டேட்கள் இலவசமாக வழங்கப்படலாம். ஆனால், புதிய பதிப்பு வெளியானால் அதை பெரும்பாலும் கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும். உங்கள் தேவை முடிந்த பிறகு, மற்றொரு நபருக்கு அதனை விற்க முடியாது எனப் பல விதிமுறைகள் உள்ளன.நம்முடைய அன்றாடப் பயன்பாட்டில் உள்ள வி...