இடுகைகள்

த்மிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரே தேசம் ஒரே நாசம்?

படம்
  பா.ஜ.க.வுக்குத் தெரிந்த ஒரே வார்த்தை ‘ஒரே’தான்! எதற்கெடுத்தாலும் ‘ஒரே’ சேர்த்துவிட்டால் தேசம் முழுக்க ஒன்றாக ஆக்கிவிட்டதாக அவர்களுக்கே ஒரு நினைப்பு! ஒரே மதம் ஒரே மொழி ஒரே உணவு ஒரே கலாச்சாரம் ஒரே தேர்வு ஒரே தேர்தல் ஒரே வரி ஒரே உரம் - என்று ஒரே பாட்டைப் பாடி, அனைத்தையும் திசை திருப்பிக் கொண்டு இருக்கிறார்கள். எல்லா நோய்க்கும் அவர்கள் வைத்திருப்பது ‘ஒரே’ மருந்துதான். தேசத்தைச் சொல்லி ஏமாற்றுவது. திசை திருப்புவது. ‘நாடு முழுக்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப் போகிறோம்’ என்பது அடுத்த பசப்புகள். சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடந்தது. பா.ஜ.க. ஆட்சி அமைந்துள்ளது. அதனைக் கலைக்கப் போகிறார்களா? இன்னும் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. அதைக் கலைக்கப் போகிறார்களா? இதனை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களே ஏற்பார்களா? நடந்து முடிந்த மாநிலங்களைக் கலைத்து தேர்தல் நடத்துவதன் மூலமாக எத்தனை ஆயிரம் கோடி மீண்டும் செலவாகும்? பா.ஜ.க.வுக்கு தெரிந்த பாதை என்பது கொல்லைப்புற வழியாகும். சட்டமன்றங்களில் தான் வெற்றி பெற முடியவில்லை என்றால் ஆளும் கட்சி உறுப்பினர்களை இழுத்து, ஆட்சியைக் கலைப்பது அதற்குத் தெரிந...