இடுகைகள்

கவிஞர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுப்பிரமணிய பாரதி

படம்
சுருக்க வரலாறு:- சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பரம் மாதம் 11-ந்தேதி பிறந்தார் . இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார்.  பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.  இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார்.  தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர்.  இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள்  பகத் சிங் , வ. உ. சிதம்பரம் பிள்ளை,சுப்பிரமணிய சிவா,சுபாஷ் சந்திர போஸ்,  பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், மற்றும் அரவிந்தர், காந்தி போன்ற விடுதலை போராளிகள்.ஆகியோர்.  தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார்.  இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற...

வாலிப கவிஞர் "வாலி"

படம்
சினிமா பாடலாசிரியர் " வாலி " (வயது 82) இன்று காலமானார். [ 1931-2013] நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலிஜூன் 14 முதல் நுரையீரல் தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார்.  உடல்நிலை மோசமானதை அடுத்து தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.  சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட் டது. பின்னர் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார். கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மோசமானது. அவருக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். வாலி (1931-2013) கவிஞர் வாலி, 1931 அக்., 29ல் திருச்சிக்கு அருகே உள்ள திருப்பராய்த்துறையில் பிறந்தார். இவரது பெற்றோர் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பொன்னம்மாள்.  பின் ஸ்ர...