பெட்ரோலை ஓரங்கட்ட ஹீலியம் - 3?
இந்தியாவுக்கு தேவையான எரிசக்தி பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், சந்திரனி லிருந்து,அதிக சக்தியுடைய எரிபொருளான, 'ஹீலியம் - 3' வாயுவை கொண்டு வர, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது. 2030க்குள் இந்த திட்டம் நிறைவேறும்' என, 'இஸ்ரோ' நம்பிக்கை தெரிவித்துள்ளது. 'இஸ்ரோ' என்கிற இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், விண்வெளி ஆய்வில் பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. சர்வதேச அளவில், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளுக்கு போட்டியாக விண்வெளி ஆய்வில், இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. சந்திரனுக்கு, 2008, அக்டோபரில், 'சந்திராயன் 1' விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலம், சந்திரனை வெற்றிகரமாக அடைந்து, சந்திரன் பற்றி பல்வேறு தகவல்களை, இஸ்ரோவுக்கு அனுப்பி வந்தது. இதனால், சந்திரனில், கனிம வளம், நீர்வளம் அதிகம் இருப்பது தெரிந்தது. குறிப்பாக, சந்திரனில், 'ஹீலியம் - 3' வாயு அதிகம் இருப்பது தெரிந்தது. இது, 10 மடங்கு அதிக சக்தி கொண்ட எரிபொருளாகும். இதனால், சந்திரனிலிருந்து ஹீலியம் - 3 வாயுவை கொண்டு வருவது பற்றி, இஸ்ரோ ஆலோசித்து வருகிறது. இந்தியாவின் எரிசக்தி தேவை...