அமெரிக்கா போல் .....?
------------------------- ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களில்.அல்லது அவர் ஆணை பிறப்பித்ததில் அவர் படம் சிரித்த உருவம் இல்லாத ஒரே திட்டம் என்ற பெருமையை கொண்டது அரசு மது பானக் கடை கள் தாம் [டாஸ்மாக்] . தமிழகத்தில் 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும், சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான, மது வகைகள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. சென்ற செப்டம்பர் மாதம், 2.88 கோடி பாட்டில்களை உள்ளடக்கிய, 24 லட்சம் பெட்டி பீர் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இதன் மதிப்பு, 288 கோடி ரூபாய். அதேசமயம், கடந்த ஆகஸ்ட் மாதம், 324 கோடி ரூபாய் மதிப்பிலான, 27 லட்சம் பெட்டி பீர் விற்பனையானது. இது, கடந்த ஜூலை மாதம், 29 லட்சம் பெட்டிகளாக இருந்தது. மது வகைகள் விற்பனை, ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் முறையே, 46 லட்சம், 45 லட்சம் மற்றும், 43 லட்சம் பெட்டிகள் குறைந்துள்ளன. டாஸ்மாக் விற்பனை தொட...