விடாது வெப்பம்.
100,104 என்று டிகிரிகளில் தனது கொடுமையை அளவிட்ட வெப்பம் இடையில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்ததால் கொஞ்சம் அடக்கி வாசித்தது. சென்னை,புதுச்சேரி நெல்லை,குமரி, என்று தமிழ் நாட்டில் பரவலான மழையால் ஓரளவு வெப்பம் குறைந்து வேர்க்குருகள் மறைய ஆரம்பித்த நேரம் அம்மழை கேரளா எல்லைக்குள் போய் விட்டதால் தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்க துவங்கி உள்ளது. அதிகபட்சமாக, மதுரையில், 40 டிகிரி, 'செல்சியஸ்' பதிவாகி உள்ளது. சென்னை, திருச்சி, நாகப்பட்டினம் நகரங்களில், 38 - 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் நிலவுகிறது. 'ஜூன் முழுவதும் இந்த வெப்ப அளவே நீடிக்கும் என வானிலை ஆய்வு பயங்காட்டுகிறது. கேரளாவில், ஜூன் முதல் வாரத்தில் தென் மேற்கு பருவ மழை உருவாகி, வட திசையை நோக்கி நகரும். அந்த தாக்கத்தால், தமிழகத்தின், ஒரு சில இடங்களில் பெய்யும் மழையால், வெப்பம் சற்று தணியும். வட திசை நோக்கி பருவ மழை நகர்ந்ததும், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். இந்த சீதோஷ்ண நிலையே தற்போதும் நிலவுகிறது. தென் மேற்கு பருவ மழை கேரளாவில் உருவாகி, வட திசையை நோக்கி நகர்ந்த காரணத்தால்,...