எல்லோரும் சமமே.

"வக்கீல்களையும், நீதிபதி யும் கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், 2–ந்தேதி அனைத்து நீதிமன்றம்கள், தீர்ப்பாயங்களில் வக்கீல்கள் ஆஜராகமாட்டார்கள். இதுவரை கைது செய்யப்பட்ட வக்கீல்கள் விடுவிக்கப்பட வேண்டும். பொய் வழக்குகளின் அடிப்படையில் வக்கீல்களை கைது செய்வதை நிறுத்த வேண்டும். இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். " இவையாவும் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கர்ப்பிணியாக்கி கைதான நீதிபதி [?]என்பவருக்கு ஆதரவாக நாளைய நீதிபதிகளாகும் இன்றைய வக்கீல்கள் சங்க தீர்மானம். நீதியை வழங்க வேண்டிய வர் குற்றம் செய்தால் அதை கண்டு கொள்ளகூடாதாம்.வழக்குரைஞர்கள் என்னதான் அடாவடி செய்தாலும் அதையும் கண்டு கொள்ள கூடாதாம். அதைத்தான் நீதிபதி கைதை கண்டித்து இவர்கள் நடத்தும் போராட்டம் சொல்லுகிறது. தமிழ் நாடு முழுக்க வழக்குரைஞர்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை தகர்ந்து வருவதை இவர்கள் அறியாமல் மேலும் அட்டகாசம் செய்வதும்,சட்டத்தின் வலி...