அத்துடன் நன்றிகள்.!

தொடர்ந்து வந்து,சென்று கொண்டிருப்பவர்களுக்கு வணக்கம். அத்துடன் நன்றிகள்.! 2011 தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் பொங்கலில் தனது முதல் வாசகருடன் பயணத்தை துவக்கிய "சுரன்" இன்று எட்டு லட்சம் (800000)பார்வைகளுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சுரன் துவங்கியபோது வலைப்பூக்கள் எண்ணிக்கையிலடங்காவைகளாக வலம் வந்தன. அவற்றுக்கான திரட்டிகளும் பத்துக்கு மேல் உதவின. இன்டலி.தமிழ் 10,தமிழ் வெளி ,திரட்டி,உலவு,ஹாரம்,சங்கமம், இன்னும் பிற. அன்றிலிருந்து இன்றுவரை "தமிழ் மணம் "ஒன்றுதான் தொடர்ந்து மணம் வீசிக்கொண்டிருக்கிறது. மற்றவைகளை வலைப்பூ வலைஞ்சர்கள் இழந்து விட்டனர். கடைசியாக இன்டலி தனது பயணத்தை நிறுத்திவிட்டது. இவை வலைப்பூ தரப்பினரையும் மிக இழப்பு. அப்படி இல்லாவிட்டாலும் கூட வலைப்பூக்கள் மிக குறைந்து விட்டன. காரணங்கள் முகநூலும்,வாட்ஸ் அப் களும்தான் தனியே வலைப்பூ துவக்கி மெனக்கெட வேண்டாம். தங்கள் கருத்தை சூடாக இவைகளில் பதிந்து விடலாம். இவர்கள் வலைப்பூவுக்கு யார் வருகிறார்கள். எத்தனை பேர் வந்தார்கள் என்ற...