சவால் விடும் குப்பைகள்....!!!
இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வணிகப் பயன்பாட்டில் மட்டுமின்றி, வீடுகளில் இருந்தேகூட, மறுசுழற்சி செய்ய முடியாத சிக்கலான கழிவுகளை ஏராளமாக வெளியேற்றுவதால் அவற்றைச் சுத்திகரிப்பது அத்தனைச் சுலபமானதல்ல. குப்பைக் கழிவுகளைக் கையாளுவது அத்தனை எளிதானதும் அல்ல, அதேநேரத்தில் தீர்க்க முடியாத பிரச்னையும் அல்ல. ஏராளமான பிளாஸ்டிக், மின்னணுப் பொருள்கள் வீடுகளில் இருந்தே லட்சக்கணக்கான டன்களாக எல்லாவற்றுடன் கலந்து குவிகின்றன. இத்தனைக்கும் மலைபோல் குவியும் இந்தக் குப்பைகளில் இருந்து அற்புதமான இயற்கை உரம் தயாரிக்க முடியும், எரிவாயு தயாரிக்க முடியும், இன்னும் கூடுதலாக மின்சாரமும் தயாரிக்கலாம் என்கிறார்கள். இவை அத்தனையும் அண்மைக்காலங்களில் அதிகவிலை கொண்ட, அரிதான விஷயங்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ரசாயன உரங்களில் இருந்து மீள, இயற்கை உரம் அவசியம். ஆனாலும் குப்பைகள் எரிகின்றன (எரிக்கப்படுகின்றன!). மிகவிரைவில் ஒரு எரிவாயு சிலிண்டர் ரூ. 1,000 ஆகப் போகிறது (மானியம் வந்தாலும் நட்டம் நமக்குத்தான்!). ஆனாலும் குப்பைகள் எரிகின்றன. மின்சாரமும் அப்படியே! இதில் மின்சாரம் எப்படியோ, உரமும்,...