இடுகைகள்

செம் மரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாய்ந்தது செம் மரம் மட்டுமல்ல.

படம்
அடிக் கடி  நாம் செய்திகளில் வாசிக்கும் "செம்மரம் கடத்தல்"செய்தி நம்மை அவ்வளவாக பாதித்ததில்லை. ஆனால் செம்மரம் கடத்தியதற்காக 20 தமிழ் கூலித்தொழிலாளர்கள் ஆந்திர காவல் துறையினரால் அநியாயமாக சுட்டுக் கொள்ளப் பட்டிருப்பது நம்மை பாதித்துள்ளது. இந்த செம்மரம் கடத்தி கோடிக்கணக்கில் சம்பாதித்து சொகுசாக வாழ்பவர்கள் அரசியல் பின்னணியில் இருக்க,அவர்களுக்கு மரம் வெட்டி தர கூலிக்கு அப்பாவி மலைவாழ் மக்களை  தேடி தரும் முகவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதித்து பாதுகாப்பாக இருக்க வேலை வாய்ப்பின்றி உணவுக்கு உழைப்பாக மரம் வெட்ட வந்த அப்பாவி மலை வாழ் மக்கள் காவல்துறையினரின் கணக்குக்காக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு கல்வியறிவு இல்லாததால் செம்மரம் வெட்டுவது,கடத்துவது சட்ட விரோதம் என்பது கூட தெரியாதாம். வெயிலை தனக்குள் உள் வாங்கிக்கொண்டு  குளிர்ச்சியை கொடுக்கும்  சக்தி செம்மரத்திற்கு உண்டு.  இதனால், சிங்கப்பூர், தாய்லாந்து, துபாய், ஏமன், சீனா போன்ற நாடுகளில் செம்மரங்களில் கட்டில், மேஜை செய்கின்றனர். அமெரிக்காவில் செம்மர பட்டையில் இருந்து, 'வயாகரா' தயாரிக...