இடுகைகள்

தீர்ப்புகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தீர்ப்புகள் திருத்தப்படலாம்?

படம்
 'ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின், மேல் முறையீட்டு மனு விசாரணையில், அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது; அவரின் வாதங்களை கர்நாடக ஐகோர்ட் ஏற்கக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.  மேலும், அன்பழகன் தரப்பு எழுத்து பூர்வமான வாதங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அதனால், ஜெ., வழக்கில், கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பு வழங்கும் தேதி நெருங்கியுள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உட்பட, நான்கு பேருக்கு எதிரான, சொத்து குவிப்பு வழக்கு, பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானார். இவ்வழக்கில், ஜெயலலிதாவுக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. அவருடன் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு, நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், தலா, 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதா உட்பட, நால்வரும், கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, நீதிபதி குமாரசாமி முன்னிலையி...