இறப்பிற்கு பின் வாழ்வு?
அறிவியல் வளர்ச்சி : வி.இ.குகநாதன் 18-11-16 பிரித்தானிய ஊடகங்களில் அலசப்பட்ட ஒரு முக்கிய விடயமாக 14 வயது சிறுமி (புற்றுநோயால்) தனது இறப்பிற்கு பின்னரான வாழும் ஆசையினை நிறைவேற்றுவதற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்ததனைக் குறிப்பிடலாம். அதாவது இன்றைய நிலையில் குறித்த புற்றுநோயிற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் இன்னும் ஒரு நூறு வருடங்களில் அதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படும். உதாரணமாக நூறு வருடங்களிற்கு முன்னர் உயிர்க்கொல்லி நோய்களான மலேரியா, கசம் போன்றவற்றுக்கு இன்று மருந்து இருப்பது போன்றது. எனவே இறந்த சிறுமியின...