இடுகைகள்

அருகம் புல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலை எழுந்தவுடன்

படம்
  தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன்...

அருகம் புல் :அறுக்கும் நோய்களை

படம்
அருகம்புல்லின் துளிர் இலைகள், அதன் தண்டு, வேர் ஆகிய அனைத்துமே மருத்துவப் பயன்களை உடையன ஆகும். அரு கம்புல் தோலின் மேல் ஏற்படும் வெண்புள்ளிகளை குணப்படுத்த வல்லது. மேலும் சிறுநீரகக் கோளாறுகள் (சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் உட்பட), ஆஸ்துமா என்னும் மூச்சு முட்டல், உடலில் ஏற்படும் துர்நாற்றம், நெஞ்சுச்சளி, தீப்புண்கள், கண்களில் ஏற்படும் தொற்று நோய்கள், உடற்சோர்வு, ரத்தத்தில் உள்ள சர்க்கரை சத்து அதிகப்படுதல், வயிற்றுப் போக்கு ஆகிய நோய்களையும் போக்க வல்லது. மேற்கூறிய நோய்கள் மட்டுமின்றி பின்வரும் பெயர்களுடைய ஏராளமான நோய்களையும் அரு கம்புல் வேரறுக்க வல்லது. அவை பின்வருமாறு:- 1.புற்று நோய்க்கு எதிரானது. 2.சர்க்கரை நோயை சீர் செய்ய வல்லது. 3.வயிற்றுப் போக்கை குணப்படுத்துவது. 4. குமட்டல், வாந்தி இவற்றை தணிக்கக் கூடியது. 5.நுண்கிருமிகளைத் தடுக்க வல்லது. 6.உற்சாகத்தைத் தரவல்லது. (ரத்தத்தில் பிராணவாயுவை அதிகப்படுத்த வல்லது). 7.மூட்டுவலிகளைத் தணிக்கக் கூடியது. 8.கிருமித் தொற்றினைக் கண்டிக்க வல்லது. 9.வற்றச் செய்வது. 10.அகட்டு வாய் அகற்றி. 11.கருத்தடைக்கு உகந்தது. 1...