பொது அமைதியை கெடுக்கும்
திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான கே.ராஜன், சில தினங்களுக்கு முன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், “நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை எடுத்துள்ளார். அதை டிடிஎச்சில் நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்துள்ளார். இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதை தொடர்ந்து அவரது ரசிகர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறி இருந்தார். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மிரட்டல் வந்த செல்போன் நம்பர்களை வைத்து விசாரித்தனர். இதில், ஓசூரை சேர்ந்த மூர்த்தி (26), முருகன் (42), சூர்யா (42) ஆகியோர் மிரட்டியது தெரியவந்தது. கமல்ஹாசனின் ரசிகர்களான 3 பேர் மீதும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் களை போலீசார் கைது செய்தனர். நேற்று மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். கொலை மிரட்டல் என்பது மிக மோசமான செயல்தான் .ஆனால் இவர்களை பொன்ற ரசிகர்கள் மிரட்டல் என்பது வெறும் வாய்ச்சொல்.அவர்கள் ரசிக்கும் நடிகரின் மீதான பாசத்தால்...