இடுகைகள்

வால் நட்சத்திரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வால் நட்சத்திரம்-

படம்
இப்போது மேற்கு வானில் ஒரு வால்நட்சத்திரம் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதன் பெயர்: C/2011 L4 பாண்ட்ராஸ் (C/2011 L4 (PANSTARRS).  இன்னும் ஒரு வாரத்துக்கு அதனை எந்த வித கருவியும் இன்றி வெறும் கண்ணால பார்க்கலாம்.  வால் நட்சத்திரம் என்றால் என்ன ? ஆதிகாலத்தில் நம் மக்களுக்கு வால்நட்சத்திரங்கள் பற்றியோ, அது எப்படி உருவாகிறது என்பது பற்றியோ எதுவும் தெரியாது. அதனால் வால்நட்சத்திரங்கள் பற்றி ஏராளமான கட்டுக் கதைகள் நம்மிடையே உலவி வந்தன. வால்நட்சத்திரங்கள் வந்தால் உலகுக்கு ஆகாது என்றும், அரசன் செத்துப் போவான், ஆட்சியாளர்களின் வீழ்ச்சியும் அஸ்தமனமும் நடக்கும் என்றும், ஒரு ஊரின்- நாட்டின் கெட்ட நேரம் வந்தால்தான் வால்நட்சத்திரங்கள் உதிக்கும் என்றெல்லாம் ஏராளமான புனைவுகள் பேசப்பட்டன. அவை நம்பவும் பட்டன.  இதெல்லாம் உண்மையா? அப்படி ஏதும் இல்லை என்பதுதான் உண்மை. இது பின்னர் அறிவியல் மூலம் நிரூபணம் ஆனது.ஆனால் ஆதிகாலத்தில், வால்நட்சத்திரங்களைப் பார்த்து பயந்தனர். அதிலிருந்து வரும் ஒளி ஏதோ இயற்கையின் சக்திக்கு அப்பாற்பட்டு எங்கிருந்தோ வந்ததாக மக்கள் முழுமையாய் ...