ஸ்கிப்பிங் விளையாடு......!
முன்பெல்லாம் வீடுகளில் அடைந்து கிடக்கும் இளம் பெண்களுக்கு பல்லாங்குழி,பாண்டி,என்று பல விளையாட்டுகள் இருந்தன.அவற்றில் ஒன்றுதான் ஸ்கிப்பிங் விளையாடுவது.அதில் பல முறைகளில் ஆடி அசத்துவார்கள்.ஆயிரக்கணக்கில் ஸ்கிப்பிங் சுற்ரியவர்களும் உண்டு.அதனால் நமது பெண்களும் கொடியிடை பொன்ற லட்சணங்களுடன் இளமையுடன் இருந்தனர்.பிரசவமும் எளிதாக இருந்தது.ஏழு,எட்டு வரை நடந்ததும் உடல் கட்டுவிடாமல் இருந்தவர் கள் ஏராளம். இன்று தொலைக்காட்சியும்,முகனூலும் அந்த இடத்தை பிடித்துக்கொண்டன.இன்று சிசேரியன் இல்லா பிரசவங்களே அரிதாகி விட்டது.ஒரு குழந்தை பெற்றவுடனே குண்டாகி,தொப்பையுடன் வயதான பெண்கள் தோற்றத்தை கொண்டுவிடுகிறார்கள். அதற்கு மு க்கிய காரணங்களே நமது பாரம்பரிய ,கலாச்சார உணவு வகைகள்,விளையாட்டுகள்,பண்பாடுகளை ஓரங்கட்டியதுதான். பீட்சா,கணினி இன்றைய தகவல் தொழில் நுட்பக் காலத்தில் நம் இல்லத்தில் உள்ளோர்களை முற்றிலுமாக மாற்றியதுதான். ஸ்கிப்பிங் விளையாட்டை மறந்ததால் பல விளைவுகளை நாம் அனுபவித்து வருகிறோம்.பெண்கள் மட்டுமல்ல ஆண்களும்தான். ஸ்கிப்பிங் மீண்டும் உடற்பயிற்சி நிலையங்களில் முக்...