பாரத ரத்னா மற்றொரு கலைமாமணி,?
கிரிக்கெட் கிறுக்கு இளசுகளும்,சிறுவர்களையும் தான் பாதித்துள்ளது என நினத்தால்,பெருசுகளும் அதற்கு சளைத்தவர்கள் அல்ல என காண்பித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் அரசியல்வாதிகளாகவும்,சிலர் ஆட்சியாளர்களாக்வும் இருப்பது தான் வே தனை தரும் செய்திகளாகிவிட்டன. Last Updated : அஜய் மாக்கான் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரிக்கெட் சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கிட சட்டத்தையே திருத்தக் கூறுவது மிகக் கொடுமையான விடயம். பாரத் ரத்னா விருது மக்களுக்கான மகதான சேவை செய்தவர்களுக்கே இதுவரை வழங்கப்பட்டு ஒரு மரியாதைக்கான விருதாக மதிக்கப் பட்டு வருகிறது. அதை இப்போதைய காங்கிரசு அரசு தமிழகக் கலைமாமணி விருதுத்தரத்திற்கு கீழே இறக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. கிரிக்கெட் இவர்களைப்போன்றவர்களுக்குப்பிடித்த விளையாட்டு என்பதைத்தவிர என்ன தனிப்பெருமைகொண்டது? அதற்குத்தான் கிரிக்கெட் வீரர்கள் விளையாட்டு மூலமும்,விளம்பரம் மூலமும்,பொதாதிற்கு மேட்ச் பிக்சிங் மூலமும் செழிக்கச்,செழிக்க பணமழையில் நனைகிறார்களே.பாராட்டும்,நட்சத்திர அந்தஸ்தும் அவர்கள் தகுதிக்கு மேலேயே க...