நடிகர்கள் சங்கம்
சில நாட்களுக்கு முன்னர் நடிகர்கள் இலங்கை பிரச்னைக்காக உண்ணாநிலை போராட்டம் நடத்தினார்கள். அதில் சில நிகழ்வுகள்.இந்த போராட்டமே முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறி பல் நாட்கள் கழித்து அனுமதி கிடைத்ததுதான் நடத்தப்பட்டது.தன்னிந்திய நடிகர் சங்கம் இப்போது அ .தி.மு.க, கிளப்பிரிவு போலாகி விட்டது.முன்பும் நடிகர்கள் சங்கம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகத்தான் நடந்து கொள்ளும்.அதன் மூலம் தங்கள் காரியங்களை சாதித்துக்கொள்வார்கள். ஆனால் இப்போதோ தலைவர்,செயலர் இருவரும் அதிமுக தொண்டர்கள்.அதிலும் சரத் குமார் ஜெயலலிதாவின் முரட்டு பக்தர். உண்ணா போராட்டம் அன்று வந்த ஒரு சிலரைத்தவிர மற்ற அணைத்து நடிகர்களுமே வேறு வழியி ன்றிதான் வந்து சென்றார்கள் . நடிகர் ரஜினி 11மணிக்கு வந்து விட்டு ஒரு மணிக்கு கிளம்பி விட்டார். நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் இரண்டாம் பாக்க வேலை மும்பையில் இருக்கிறது.பணம் செலுத்தி வேலை நடக்கிறது என்று கூறி தனக்கு விதி விலக்கு கேட்டபோது எப்படியாவது மாலையில் கலந்து கொண்டாவது போராட்டத்தை பழ ரசம் கொடுத்து முடிக்க வாருங்கள்.எ...