இடுகைகள்

சிறுநீர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியமான சிறுநீர்?

படம்
சிறுநீர் என்பது உடலிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருள்தானே என்று அலட்சியமாக நினைக்கக் கூடாது. அது நம் உடல்நலனைக் காட்டும் மருத்துவ அறிக்கை. உடலில் இருக்கும் நோய்களையும் எதிர்காலத்தில் வர இருக்கும் நோய்களையும் முன்னரே உணர்த்தும் எச்சரிக்கை மணி.   உங்கள் சிறுநீரின் நிறம் உங்களது உடல் ஆரோக்கியத்தை தெளிவாக காட்டி விடும்.  அதை வைத்து கிட்னி நோய்கள் அல்லது பிற நோய்கள் உள்ளதா என்பதை நாம் கண்டறியலாம். ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் 400 மி.லி.க்குக் குறைந்தாலோ, 2,500 மி.லி.க்கு அதிகமானாலோ, நோயின் வெளிப்பாடாகவே இருக்கும்.  பிறந்த குழந்தைக்கு இந்த சிறுநீரின் அளவு 200 மி.லி.யில் ஆரம்பிக்கும். இதுதான் பெரியவர்களானதும் ஒன்றரை லிட்டராக மாறுகிறது.  பிறந்த குழந்தை 24 மணிநேரத்துக்குள் சிறுநீர் கழிக்காவிட்டாலும் பிறவிக் கோளாறுகள் இருக்க வாய்ப்பு உண்டு.  வைக்கோல் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் இருந்தால் அது ஆரோக்கியமான சிறுநீராக கருதப்படுகிறது. இதை தவிர மற்ற எந்த ஒரு நிறமாக சிறுநீர் இருந்தாலும் சரி, உங்கள் உடல் ஆரோ...